அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளாத போது தான் துறவு எண்ணம் வருகிறது.
சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான். ஒருவன் பேராசை கொள்கிறான். இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.
மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும். இரண்டுமே எலிப்பொறி போலத் தான். மிக்க ஈடுபாடும் அடக்குதலும் இயந்திரத்தனமானது.
நீங்கள் பேராசை, பாலுணர்வு, கோபம், பொறாமை.. இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது. அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.
மாறாக நீங்கள் அதை அடக்கினாலும், இயந்திரத்தனமாக மிகவும் ஈடுபட்டாலும், முடிவு ஒன்று தான்.
முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள். பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள். எதையும் தவிர்க்காதீர்கள். அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள். அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.
அப்போது தான் ஒரு நாள் அவற்றைக் கடந்து செல்ல முடியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.