01/07/2018

அசோகர் - வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...


வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?


சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான். இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது. 

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது. அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..


அது  என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,

ஒருமுறை அவர்  அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார். 

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும், அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.  ஏனோ தெரியவில்லை அவர்  திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.


மேலும்  இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர். ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார். ஆனால் தனது 99  சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும்  நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.