02/09/2018

வருமானவரி தாக்கல் செய்ய செப்-15 வரை கலாக்கெடு நீட்டிப்பு...


2017 - 2018 நிதி ஆண்டிக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். எனினும் கேரளாவின் வெள்ள பாதிப்பு காரணமாக கேரள மக்கள் தங்கள் வரிகளை தாக்கல் செய்ய வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக Central Board of Direct Taxes (CBDT) அறிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Due to disruption caused by severe floods in Kerala, CBDT hereby further extends the due date for furnishing Income Tax Returns from 31st Aug,2018 to 15th Sept,2018 for all Income Tax assessees in the State of Kerala,who were liable to file their Income Tax Returns by 31.08.2018.

— Income Tax India (@IncomeTaxIndia) August 28, 2018.

இந்நிலையில் தற்போது கேரள மக்களின் நிலை கருதி அவர்களது வரியினை செலுத்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருமான வரித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக வருமான வரி செலுத்த இறுதிநாளாக இருந்து ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் 31-ஆக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் தவறினால்...

மொத்த ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.