பகரக்கேள் புலத்தியனே தேகம் சித்தி
பராபரமுள் ளுரவாய் வாயுவாச்சு
நிகரில்லை ரெண்டுமென்றாய் நிலைத்தாலே
முத்தி நினைவாக மவுனத்தின் வீடு கேளு
புகலவே அகாரமதை கீழே தாக்கி
புரிந்துநின்றால் உகாரமதை மேலே சேர்த்து
உதரக்கேள் மகாரத்தின டுவே நின்று
உற்றுப்பார் பூரணத்தின் ஒளிகாண்பாயே
பூரணத்தின் மகிமையை உணர புலத்தியனே முதலில் உடலை தயார் படுத்த வேண்டும். அடுத்து உடலுக்குள்ளே உள்ள வாசியை நிறுத்தி இரண்டுக்கும் ஒன்றாக கலந்தால் முக்தி கிடைக்கும், அகாரத்தை கிழே செலுத்தி உகாரத்தை மேலே செலுத்தி மகாரத்தின் நடுவே நிற்க வேண்டும். அவ்வாறு செய்து உற்று பார்த்தால் பூரணத்தின் ஒளியை காணலாம்...
காணப்பா சக்திசிவம் ஒன்ற தாகக்
கலந்திருப்பார் ஒருவருமே காணார் காணார்
தேன்போல யருவியங்கே பாயும் வீடு
திருவான சுழிமுனையில்தி றமாய் நின்றால்
தான்போல தானுள்ளே தானே தோணும்
தனதாக முமங்கே தானே தோணும்
வீணப்பா வலைந்து கெட்டுத் திரியவேணாம்...
- அகத்தியர் பரிபூரணம் 400
பொருள்: சக்தி சிவம் இரண்டும் ஒன்றாய் கலந்து இருக்கும். ஒருவரும் கண்டிருக்க மாட்டார்கள். தேன் போல அருவி அங்கே பாயும். சுழுமுனையில் திறமாக நின்றால் தன்னைத்தானே உள்ளே காணலாம். முகம் உள்ளே தோன்றும்.வீணாக மற்றவைக்கெல்லாம் அலைந்து திரிய வேண்டாம் ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.