வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுகள் 'UFO' வந்து சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது...
ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது.
அப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள், அமெரிக்க போர்வீரர்களை வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வருவதாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டு
சென்ற உணவு வகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கி விட்டார்கள். போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமானதளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.
அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள். பின்னர் அந்த ஆதிவாசிகள், ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களைப் பார்த்து, அதை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத் தொடங்கினார்கள்.
இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் மறுக்கமுடியாத கருத்தாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.