பிரபஞ்சம் நமக்கு பலவிதமான பொக்கிசங்களைக் கொடுத்துள்ளது அதில் ஒரு மாபெரும் பொக்கிசம் தான் கற்பனை.
மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் கற்பனைகள் தான்.
நாம் எதை கற்பனை செய்கிறோமோ அதை நம்மால் நிச்சயமாக அடைந்துவிட முடியும்.
நாம் எப்படி கற்பனை செய்கிறோமோ அப்படியே அது நம்மை வந்தடையும்.
கற்பனை எந்த அளவிற்கு அழகாய் உள்ளதோ அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் அழகாய் மாறும்.
கற்பனையின் வேலையே புதிதாக ஒன்றை படைப்பது தான்.
கற்பனை தான் உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் வசீகரங்களின் முன்னோட்டம் என்றார்
-ஐன்ஸ்டின்.
உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டும் என்பதை கற்பனை செய்யுங்கள் அதன் படியே ஒவ்வொரு செயலையும் செய்து பாருங்கள்.
கற்பனையின் சக்தி அப்போது தான் புரியும்.
உடல் மற்றும் மனதளவில் யாரையும் காயப்படுத்தாத வண்ணம் உங்கள் கற்பனை இருந்தால் உங்கள் கற்பனை மட்டுமல்ல வாழ்க்கையும் நிச்சயமாக அழகாய், அர்ப்புதமாய் மாறும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.