07/09/2018

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, ஐயா வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட ரூ 40 கோடியை ஆட்டையப் போட்டவன் யாரு?


ஜூலை 30, 2000 அன்று இரவு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்..

ஜூலை 31 அன்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மனைவி பார்வத்தம்மாளுடன் சென்னையில் சந்தித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆகஸ்ட் 3, 16, 27 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய நான்கு நாட்களில் நக்கீரன் கோபால், ஐயா வீரப்பனை சந்திக்க தூதுவராக சென்றார்.

ஆகஸ்ட் 25 ம் தேதி, பிணைப்பணம் கொடுப்பதற்கான நிதியாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு அரசு தலா ரூ 5 கோடி கொடுத்து, ரூ 10 கோடி நிதியை உருவாக்கினார்கள்..

அக்டோபர் 10ம் தேதி, ஐயா நெடுமாறனும், நக்கீரன் கோபாலும் தூதுவராக சென்றார்கள்..

நவம்பர் 11ம் தேதி, ஐயா நெடுமாறன் மட்டும் தூதுவராக சென்றார்..

நவம்பர் 13ம் தேதி, நடிகர் ராஜ்குமாரை அடுத்த நாள் விடுதலை செய்வதாக அண்ணன் கொளத்தூர் மணிக்கு, ஐயா வீரப்பன் செய்தி அனுப்பினார்..

நவம்பர் 15ம் தேதி, நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்..

சிறப்பு அதிரடிப்படையின் அராஜகங்கள் குறித்த கருத்தரங்கம் நவம்பர் 26 அன்று "கொளத்தூர்" ல் நடத்தப்படும் என்று ஐயா வீரப்பனுக்கு உறுதி அளிக்கப்பட்டது..

நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ 20 கோடி, கர்நாடக அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக கர்நாடக மாநில காவல்துறை தலைமை இயக்குனர் சி. தினகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா-வின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா மூலமாக இரண்டுமுறை தலா ரூ 5 கோடி என்று, மொத்தம் ரூ 10 கோடி, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுக்கப்பட்டது.

கர்நாடக மாநில காவல்துறை துணை இயக்குனர் டி. ஜெயபிரகாஷ் ரூ 5 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுத்தார்..

நடிகர் ராஜ்குமார் மனைவி பார்வத்தம்மாள், ரூ 1 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடமும்,
ரூ 2 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன பானு என்ற நபரிடமும் கொடுத்தார்.

திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் ரூ 2 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தார்கள்.

கர்நாடக காவல்துறை,  மயக்க மருந்து மருத்துவ சோதனையில் (Narcotics Test)  ஐயா வீரப்பனின் உதவியாளர் கனகராஜ் என்பவரை உட்படுத்தியதில், மொத்தம் ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டது..

தமிழ்நாடு அரசின் சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன், நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக, ஜூலை 18, 2002 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

கர்நாடக நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க கொடுக்கப்பட்ட பணத்தை ஐயா வீரப்பனின் மனைவி வாங்கவில்லை என்று, அக்டோபர் 29, 2012 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணியா இந்தப் பணத்தை  ஆட்டையப் போட்டவன் யாரு?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.