மாயன்களால், 'குக்கிள்கான்' என்னும் அவர்களுடைய பாம்பு கடவுளுக்காக சீசென் யீட்ஸா (Chichen Itza ) என்ற நகரத்தில் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த பிரமிட்.
இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள் தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு ஊர்வன இன வேற்றுகிரக கடவுள்,
மாயன்களின் கல்வேட்டுகள் சித்திரங்கள் அனைத்திலும் இந்த ஊர்வன வேற்றுகிரகவாசிகள் உருவங்கள் தான் காணப்படுகின்றன.
உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது.
மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு, நிமிர்ந்து நிற்கிறது
இந்தப் பிரமிட்.
இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365 நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு.
அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன்.
இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.
இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு...
இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன.
வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது.
பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும்.
இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால்...
மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும்.
"அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்" என்று யோசிக்கிறீர்களா?
உலகில் எந்த ஒரு இடத்திலும், வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும்.
மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய இந்த வேற்றுகிரக ஊர்வன கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவார்களாம்.
இந்த பிரமிடு, மாயன்கள், ஊர்வன கடவுள் விசயங்களில் நாம் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு தாத்பரியம் இவற்றிற்குள் மறைந்திருக்கிறதோ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.