07/09/2018

இந்தியமும் திராவிடமும்.. தமிழின அழிப்பும்...


இன்னும் சில ஆண்டுகளில் கோலிப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை, தமிழர் பண்டிகையாக மாற்றப்படும்...

பொங்கல்,  ஏறுதழுவுதல் தமிழர் வரலாற்றில் இருந்து மறைக்கப்படும். இது தான் இந்திய திராவிட அரசுகளின் திட்டம்..

ஆரிய கட்டமைப்பால் ஆன
இந்திய அரசைப் பொறுத்தவரை இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே இனம் என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகிறது..

இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலை, பண்பாடு ஆகியவை வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

(வேற்றுமை இல்லை என்றால் இந்தியாவே இல்லை என்பதை இந்திய அரசு உணர மறுக்கிறது.)

அதிலும் குறிப்பாக தமிழ் மொழி, இனம், பண்பாடு, கலைகள் ஆகியவற்றை அழிப்பதை இனப்பகை இந்திய அரசு தனது முழுநேரப் பணியாக கருதி செயல்படுகிறது..

அதற்கு திராவிடமும் துணை நிற்கிறது...

இனப்பகை இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணர்ந்து இனிமேலாவது தமிழ் இனம்,  நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது பண்பாட்டு கலை, விளையாட்டுக்களை, வழிபாட்டை, விழாக்களை மீட்டெடுக்க வேண்டும்!

உலகில் உள்ள அனைத்து இனங்களும் தங்கள் மொழி, பண்பாடு, கலைகளை பாதுகாக்க, வளர்த்தெடுக்க போராடி வருகிறது..

ஆனால் தமிழினம் மட்டுமே தனது மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்க்காக போராடி வருகிறது.

ஒரு இனத்தின் அடையாளமே மொழியும், பண்பாடும் தான் அந்த இரண்டும் அழிந்தால்  தானாகவே இனமும் அழியும்...

விழுத்தெழு என் தமிழினமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.