07/09/2018

தரங்கம்பாடி...


தரங்கம்பாடி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.

இங்கு 1620 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால கட்டப்பட்ட கோட்டை. டச்சுக் கட்டடக் கலையின் அடையாளமாக இருக்கும் இந்தக் கோட்டை தமிழக ஆவணக் காப்பகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வார நாட்களில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

இந்திய அச்சுக் கலையின் வரலாற்றில் போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சு மற்றும் டேனிஷ்காரர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஹென்றி கே ஹென்றீக்ஸ் என்ற போர்த்துக்கீசிய பாதிரியார் அச்சிட்டு, கொல்லத்தில் 1577-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்’ என்ற புத்தகமும்... 1715-ல் தரங்கம்பாடியில் பர்த்தலோம்யூ சீகன்பால்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட பைபிளின் தமிழாக்கமான புதிய ஏற்பாடும் அச்சுக் கலை வரலாற்றில் மிக முக்கியமானவை.

இந்தய மொழிகளில் பைபிள் முதன் முதலில் தமிழில் தான் அச்சிடப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.