26/09/2018

உடலில் நோய் / வியாதி எப்படி ஏற்படுகிறது?


வாதம், பித்தம், கபம் அளவு கூடினாலோ குறைந்தாலோ வியாதி / நோய் ஏற்படும்...

உள் / வெளி உறுப்புகள் பலகீனமடையும் போதும்...

ஹர்மோன்களின் அளவு கூடும் / குறையும் போதும்...

தீங்கான வாழ்வியல் முறை & உணவு பழக்கங்களினாலும் உடல் உபாதைகள் ஏற்படும். அதை கவணிக்காமல் விடும் போது நோய் / வியாதியாக வளர்ச்சி அடையும்...

உடலில் நண்மை பயக்கும் கிறுமிகளின் அளவு குறையும் போதும்...

புற சூழலில் மாசு ஏற்பட்டிருக்கும் போதும், தொற்று நோயை ஏற்படுத்தும் கிறுமிகள் மிகுந்திருக்கும் போதும் வியாதி / நோய் ஏற்படும்...

விபத்து காரணங்களால் கூட...

இதன் அடிப்படையில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து தான் இன்றைய நவீன ஆங்கில, சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் ஓர் வியாதிக்கு மருத்துவம் செய்கிறார்கள்...

இதை தாண்டி வியாதி / நோய் / உடல் உபாதைகள், ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது... அவற்றுள் சில வற்றை காண்போம்...

கிரகம் - ஜாதகம்...

ஒரு கருவின் சிரசு தாயிடமிருந்து பிரிந்து, இந்த பூமியில் படும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் அசைவுகளுக்கு ஏற்ப, அந்த சிசுவின் விதி குறிக்கப்படுகிறது...
அந்த கோள்களின் அமைப்பு நோய் / வியாதி  ஏற்பட முக்கிய பங்கு வகிக்கிறது (உதாரணம்:- உங்கள் கண் முன்னே ஆயிரம்). நம்மில் பலர், திருமணம், உத்யோகம் போன்றவைக்கு தான் ஜாதகம் பார்க்கிறோம், ஆனால்...
ஜாதகம் மூலம், ஒருவரது உடலுக்கு எந்த வகையான வியாதி ஏற்படும், என்பதை துல்லியமாக கணிக்க முடியும், அப்படி கணிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வியாதியின் வீரியத்தை, சில யோகா, பிராணாயாமம், மருத்துவம் கொண்டு குறைக்க இயலும்...

(சில வருடங்களுக்கு முன்பு வரை மேலை நாடுகளில் கூட, ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்பு, அவரது ஜாதகம் பார்த்து தான் நாள் குறிப்பார்கள்... உதாரணங்கள், இணையத்திலே ஏராளம்)

எண்ணங்கள்...

ஒருவரது ஆழ்மனது எண்ணம் தான் அவரது விதியை தீர்மாணிக்கும். எவ்வளவு கடுமையான வியாதி ஏற்பட்டாலும் நான் மீண்டு வருவேன், சீக்கிரம் குணமடைவேன் என்று யார் ஒருவர் தீர்க்கமாக நினைக்கிறார்களோ, அந்த பாசிடீவ் எண்ணம், பிரபஞ்சத்தில் உள்ள பாசிடீவ் அலைவரிசையை அவருக்குள் தக்க வைத்து, அவர் எங்கு சென்றால் பூரண குணமடைவாரோ அங்கு அழைத்து செல்லும், அவரும் அனைவரும் அதிசயக்கும் வண்ணம் குனமடைவார்...

அதேசமயம் நெகடீவ் எண்ணங்களுடன் இருந்தால், அகத்தியரும் தந்வந்திரியுமே வைத்தியம் செய்தால் கூட அவர் பிழைக்க முடியாது...

இதை தான் நமது முன்னோர்கள்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
யத் பாவம் தத் பவதி என்று கூறினார்கள்

கண் திருஷ்டி...

ஒரு சிலருக்கு கிரகங்களின் அமைப்பும், எண்ணங்களும், வாத, பித்த, கபமும் சீராக இருந்தும், உடலில் சில உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும், அதற்கு முக்கிய காரணம் கண்திருஷ்டி. ஆம், இதுவும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைகிறது, ஆனால் உங்கள் எண்ணத்தின், அடிப்படையில் இல்லை, மாறாக உங்களை சுற்றி உள்ளவர்களின் எண்ணத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. இதுபோல் உங்களை பார்த்து பொறாமை அடையும் மக்களை, விலக்கி வைப்பது சிறந்தது. அந்த எண்ணங்கள் உங்களிடம் இருப்பின், இந்த கணமே அதை மாற்றிக் கொள்ளுங்கள், அது பிறரை மட்டுமல்ல உங்களையும் முன்னேற விடாது...
உதாரணம்:- இன்றும், தாத்தா பாட்டி இருக்கும் வீட்டில், ஓர் கை குழந்தை திடீரென்று அழுகிறது என்றால், அந்த குழந்தைக்கு மிளகாய், உப்பு சேர்த்து அந்த குழந்தையின் தலையை சுற்றி தெருவில் சென்று எரிப்பார்கள்... புதுமனை புகுவிழா, திருமணம் செய்த உடன், புதிதாக எந்த பொருள் வாங்கினாலும், அமாவாசை அன்று, சுற்றி போடுவதெல்லாம் இதற்காக தான்... இதெல்லாம் அறிவியல் தான்...

கல் அடி பட்டாலும் கண் அடி படாதே என்று சொல்லப்பட்டது இதற்காக தான்...

மாந்த்ரீகம்...

நமது முன்னோர்களின் உச்சகட்ட அறிவியலில்  ஒன்று மாந்த்ரீகம். இதை வைத்து பல சாதனைகளை நிகழ்த்த முடியும். இதை எல்லோராலும் கையாண்டு விட முடியாது, அதற்கு மிகப் பெரிய மனோபலம் வேண்டும். இன்றைய காலகட்டத்தில் 99.9% மக்கள், பிறர் மீது கொண்ட துவேஷம், பொறாமையால், இதனை தவறாக பயன்படுத்துகின்றனர், அதனால் இதைப்பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டாம்...

இந்த பிரச்சனை உங்களை நெருங்காமல் இருக்க ஒரே வழி, குல தெய்வ வழிபாடு தான்...

பாவம் புண்ணியம்...

நாம் பிறருக்கு உடல் ரீதியாகவோ பண ரீதியாகவோ செய்வது மட்டும் பாவம் & புண்ணியம் சேர்க்காது...

நமது எண்ணங்கள் தான் இங்கும் நமக்கு வலு சேர்க்கிறது... ஊருக்காகவும் பேருக்காகவும் 100 பேருக்கு அன்னதானம் செய்வது புண்ணியம் சேர்க்காது. அதுவே நீங்கள் எதையும் எதிர்பாராமல், குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி வாங்கி போட்டால் கூட உங்களுக்கு புண்ணியம் தான்...

இப்படி நீங்கள் செய்த ஒரு செயல், தெரிந்தோ தெரியாமலோ, பிறர் மனதை புண்படுத்தி இருந்தால், அது பாவமாக மாறும்... பிறர் மனதை சந்தோஷபடுத்தி இருந்தால் புண்ணியமாக மாறும்...

இந்த பாவ புண்ணியம் பெரும்பாலும், உங்கள் வாழ்வில் எல்லா இடங்களிலும், உங்களுக்கு துணை நிற்கும் / காலை வாரும்...

இதை தான் நமது முன்னோர்கள் தர்மம் தலை காக்கும் என்று கூறினார்கள்...

நவீன மருத்துவர்கள், ஒருவரை இனிமேல் குணப்படுத்த முடியாது என்று கை விடப்பட்ட எத்தனையோ பேர், பல வருடங்கள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்...

இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

இப்பொழுது நீங்களே சிந்தித்து பாருங்கள், மாந்த்ரீகமோ, ஜாதகக் கோளாறோ, கண்திருஷ்டியாலோ பிரச்சனை உள்ள ஒருவருக்கு, வெறும் மருந்து மாத்திரைகளோ / அறுவை சிகிச்சையோ செய்து அவரை பூரண குணம் அடைய செய்ய முடியுமா ? வாய்ப்பே இல்லை என்பது தான் கசப்பான உண்மை...

இதனால் தான், இன்று பல நோயாளிகள், நான் பல மருத்துவர்களை கண்டுள்ளேன் ஆனால் எனக்கு இந்த வியாதி சரியாக வில்லை என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த மருத்துவரையும் தவறாக எண்ண முடியாது, அவர் கற்ற வித்தை அத்தனையையும் பயன்படுத்திப் பார்த்தும், அந்த வியாதியை குணம் செய்ய முடியவில்லை என்றால், அவரால் என்ன செய்ய முடியும்?

நீண்ட நாட்களாக பிரச்சனை உள்ள ஒருவருக்கு, மேற்கூறிய பிரச்சனை இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்து, அந்த பிரச்சனையை, சரி செய்து விட்டு மருத்துவம் செய்தால், 100% நிச்சயம் அந்த வியாதி குணமடையும்...

முக்கிய குறிப்பு :- பேய் ஓட்டுகிறேன், பில்லி சூன்யம் செய்வினை எடுக்கிறேன் என்று நிறைய பேர் திரிகிறார்கள்... அவர்களுள், உண்மையிலேயே வித்தை தெரிந்தவர்கள் மிக மிக குறைவு தான்... (எங்களுக்கு அது போல் யாரையும் தெரியாது)

அதனால் தான் நம் முன்னோர்கள், பல வருடங்களாக வியாதியோடு இருப்பவர்களை, அவரவர் குலதெய்வ வழிபாடுகளை, அவரவர் முறைப்படி செய்துவிட்டு, அவர்களின் சக்திக்கு ஏற்ப, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப் படுபவர்களுக்கு அண்ணதானம் செய்துவிட்டு, அவர்களது கிரக சூழலுக்கு ஏற்ப சில பரிகாரங்களை செய்து வந்த பிறகு தான் வைத்தியம் செய்தார்கள். அவர்களால் பிரபஞ்ச ஆற்றலுடன், பல வியாதிகளை குணப்படுத்தவும் முடிந்தது.

நோய் / வியாதி / உடல் உபாதைகள் வேர் அறிந்து வைத்தியம் செய்தால் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும்...

முழுவதும் படித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

- முனைவர் பா. ஜெயப்ரசாத்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.