26/09/2018

நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம்...


ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது. நாம் அதிமாகச் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வுவயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனிதநேயமே நமது தேவை. புத்திசாலித்தனத்தைவிட அன்பும் மென்மையுமே தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். ஆகவே, புதிய உலகிற்காக போரிடுவோம். அது ஒரு நாகரீகமான உலகம்..

-  சார்லி சாப்ளின்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.