12/11/2018

தமிழர்கள் தான் உலகின் தொல்குடி - 2014 செய்தி...


தமிழர்கள்தான் இந்தியாவில் அல்ல, ஆசியாவில் அல்ல, உலகின் தொல்குடி என்பதற்கான ஆதாரம் கீழே....

தேசிய அளவிலான புவியியல் சார் (national Geographic) மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் (Spencer Wells - geneticist and anthropologists at National Geographic Society) மற்றும் திரு.பிச்சப்பன் (Prof. Ramasmy Pitchappan from, Madurai Kamaraj University) என்பவரும் இனைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதில் நம் மதுரை அருகிலுள்ள சோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் திரு. விருமாண்டி (virumandi) ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான M130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபணு 70,000 வருடங்கள் பழமையானது இதன் தொடர்ச்சிகள் ஆபிரிக்கா மற்றும் ஆவுசுத்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆவுசுத்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழன் தன் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித நாகரீகம் தோன்றுவதற்க்கு முன்னமே தோன்றியவன் தமிழன் ஆனால் இன்று நம் நிலை... உலகமே நம்மில் ஆரம்பித்தது இன்று நாம் அடி வாங்காத இடமே இல்லை எனும்நிலை, இலங்கையிலிருந்து, மலேசியா, மும்பை, கர்நடகா, ஆந்திரா, கேரளா, இந்தியா, ஏன் தமிழகத்திலேயே தமிழக அரசு நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது.

காரணம் நம் வரலாறு நம்மிடம் மறைக்கப்பட்டது தான்.....  அதை மீட்க வேண்டியது நம் கடமை.... தமிழனுக்கு தான் யார் என்பதை உனர்த்த வேண்டிய தருணம் இது... ஒன்றினைவோம் வரலாறு மீட்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.