12/11/2018

திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்...


பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ.

பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய் --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.

எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?

1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா... கோ.. விந்தா....

2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?

3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?

4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன், முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?

5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?

6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?

7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?

8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்?

அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?

9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?

10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?

சுருக்கமாக,

பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது..

எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்..

மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....?

அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?

தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்..

நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய்..

உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய்..

எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.