12/11/2018

இந்த இடத்திற்கு போனால் திரும்ப மாட்டீர்கள்.. காரணம் அமானுஷ்யம்...


அமானுஷ்யங்கள் மற்றும் மர்மங்கள் குறித்து கேட்பதற்கும், வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும்.

ஆனால் அதில் நாம் மாட்டிக் கொண்டால் அது கொடுமைகளின் உச்சம்.

உலகில் நிறைய மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கபடாமலேயே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பதிவு தான் இது..

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் கென்யாவில் காணப்படும் “துர்கானா ஏரி” .

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுவாரசியம் இங்கு காணப்பட்டாலும் ஒருவித தீராத மர்மம் இங்கு காணப்படுவதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது..

இந்த துர்கானா ஏரியை சுற்றிலும் சிறு சிறு தீவுகள் நிறைய காணப்படுகின்றன, அவற்றில் ஒன்று தான் “என்வைட்டினெட்”.

இதற்கு “திரும்ப வராது” என்பதே பொருள்.

பெயருக்கு ஏற்றார் போல் இங்கு செல்லும் எவருமே திரும்பி வரமாட்டார்கள்..

ஆரம்பத்தில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தது மட்டுமில்லாமல், அவர்கள் தங்களது வர்த்தகத்திற்காக பக்கத்து தீவுகளுக்கு சென்ற வண்ணம் தான் இருந்துள்ளனர்.

ஆனால், காலப்போக்கில் அங்கிருந்து வெளியே செல்லும் மக்களின் தொகை குறைய துவங்கியுள்ளது..

ஒரு கட்டத்தில் யாருமே அங்கிருந்து வராமல் போன காரணத்தினால் சந்தேகமடைந்த பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் அந்த தீவுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போக “என்வைட்டினெட்” மர்ம தீவாகவே மாறியது.

இது குறித்து பக்கத்து தீவுகளில் வசிப்பவர்களிடம் தகவல்களை சேகரித்த போது. அந்த தீவில் ஒரு பிரம்மாண்ட ஒளி வரும் என்றும் அப்போது அந்த இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள், என்றும் அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என கூறினர்.

ஆனால் இந்த பிரமாண்ட ஒளி எப்படி வருகிறது? அது மனிதர்களை எரித்து விடுகிறதா? அப்படி இருந்தால் மனித எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே அவைகள் எங்கே என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை..

இந்த தீவில் காணப்படும் மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கிறார்கள் என்றும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்கரம் சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் காணாமல் போகிறார்கள் என்றும் பரவலான கருத்துக்கள் வலம் வருகின்றன..

ஆனால் எது உண்மை என்பது இப்போது வரை வெளிவரவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.