28/11/2018

காலம் என்பது நிலையானது அல்ல.....


காலம் (Time)  எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை மாறுபடுகிறது என இப்போதுள்ள அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்...

ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்பாக மயன் காலம் எத்தனை வகைப்படும் என வகுத்து கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்படி உள்ளது.....

"கண்ணிமை விண்ணிமை மண்ணிமை எண்ணிமை
பண்ணிமை ஐந்தும் காலக்கூறே" -13

கண்ணிமை - #conceptual #moment

கண்ணிமைக்கும் நேரம் அல்ல....கருத்து உருவாகும் நேரம் ஒருவருக்கு ஒருவர் மாறுப்படுகிறது....

மேலும் ஒரு கருத்தில் ஊன்றி நின்றால் காலம் செயல்படாது....

கண்ணும் கருத்துமா பாத்துக்கோ என சொல்லுவதும் இதனால் தானோ.....

விண்ணிமை - celestial moment

பூமிக்கு அப்பால் உள்ள நேரம் தான்... விண்ணிமை நேரம்

நிறைய Sciencefiction படங்களில் பார்த்து இருப்போம்... .ஒருவர் வேறு ஒரு கிரகத்திற்கு விண்கலத்தில் போய்விட்டு மீண்டும் பூமிக்கு 5 வருடத்தில்  வருவார் ஆனால் பூமியில் அவருடைய பேரன் இறந்து அவன் பேரன் வாழ்ந்து கொண்டு இருப்பான்... இந்த கால வேறுபாட்டை தான் விண்ணிமை என்கிறார் மயன்

மண்ணிமை - terrestial moment

பூமிக்குள் ஒரு நிலத்திற்கும் மற்றொரு நிலத்திற்கும் இடையிலான காலக்கணக்கு....

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் 12 மணி நேர வித்தியாசம் உள்ளது.....

இது தான் நிலத்தின் அடிப்படையில் கால பகுப்பு..

எண்ணிமை  - intuitional moment

எண்ணத்தில் லயித்து போகுதல்.... தான் உள்ளுணர்வில் நிலைத்து காலத்தை மறத்தல்... அல்லது... கால வேறுபாடு நிகழுவது.... அந்த நேரத்தில் வெளியே செயல்படும் மனிதருக்கும் உள்ளுணர்வில் லயிப்பவருக்கும் உள்ள நேர வேறுபாடு.... நிலத்தின் அடிப்படையில் நேரம் மாறுவதை போல.. மனிதனின் அடிப்படையில் காலத்தின் மாறுபாடு...

பண்ணிமை - Rhthymic moment

ஒரு கூட்டம் இசையில் மூழ்கும் போதும்... காலம் நின்று போகும்.....
இதை விளக்குவது கடினம்... அனுபவத்தவர்களுக்கு தெரியும்..

மயனுக்கு இந்த ஒரு விசயத்திற்காகவே.. 1000 நோபல் பரிசுகளை கொடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.