இந்த பூமியோட இயற்கையோட ஒரே எதிரி மனித இனம் தான். இதுல பெரிய காமடி என்னனா இந்த இனத்துக்குள்ளையே பெருங்கூட்டத்தை ஒரு சிறிய கூட்டம் ஆள்றதுதான். சரி இந்த சிறிய கூட்டத்த அழிச்சிட்டா இயற்கைய காப்பாத்திடலாமா ? வாய்ப்பே இல்ல. தலைமையில் உள்ள அந்த ஒரே கூட்டம் மட்டுமே எல்லா உளவியல் தாக்குதல்களையும் செய்கிறதா நாம ஒரே பாதைல பயணிக்கிறோம் ஆனா உண்மையான எதிரி நமக்குள்ளையே இருக்கான், நம் மூலையில் ஒரு அங்கமா செயல்படுறான். அவன் ஒவ்வொரு முறையும் மனித இனத்தோட சிறந்த மேதாவி கூட்டத்தை தலைவனா தேர்ந்தெடுத்து அவன் மூலம் உலகத்தை ஆளுறான்.
யார் அந்த அவன் ? அவன் வேற யாரும் இல்ல மனித இனம் பொக்கிஷமா பாக்குற ஆறாம் அறிவு தான். லட்சக்கணக்கான வருடமா அவுங்க உற்பத்தி செஞ்சது நமது சிந்திக்கும் திறனதான். இந்த திறன் அடுத்த தலைமையை அதுவாகவே முடிவு செய்து விடும். இந்த ஆறாம் அறிவ இந்த மனிதனுக்கு கொடுத்தவன் எவன் ? இது தான் கேள்வி.
இத கொஞ்சம் தெளிவா சொல்லனுமா உலக அரசியல கரைச்சி குடிச்சி, உண்மையான வரலாற தூசி தட்டி எடுத்து, ஆக சிறந்த கருத்தியலை மக்கள் மனதில் பதியவச்சி உங்கள இயக்குற அந்த சிறு கூட்டத்த இனம் கண்டு மொத்தமா அழிச்சிட்டீங்க. இப்ப என்ன நடக்கும் ? மொத்த மனித இனமும் விடுதலையா ? மிக பெரிய கருத்தியலை கொண்ட மக்கள் இனம் ஒப்பற்ற வாழ்வியலுக்கு மாறும்னு நினைக்கிறீங்களா ? கிடையாவே கிடையாது. இந்த நேரத்துல மனிதனோட ஆறாம் அறிவு செயல்படும் அந்த தலைமை கூட்டத்தின் அறிவின் அடுத்த கட்டத்தில் உள்ள மனிதர்கள் அடுத்த தலைமையா ஆவாங்க . இது ஒன்னும் திட்டமிட்டு நிகழக்கூடிய நிகழ்வு இல்ல மனிதனுடைய அறிவு படைக்க பட்டதே அப்படிதான்.
மொத்த மனித இனத்துக்கும் இந்த அறிவு தரப்பட்டதா ? இந்த இடம் தான் குழப்பமான இடம் காரணம் என்னனா இந்த அறிவு ஒரு குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கப்பட்டு மற்ற மனிதர்களுக்கு தொடர்ந்து கடத்தப்படுத்து ரொம்ப சுலபமா . கிட்டத்தட்ட ஆறாம் அறிவு ஒரு வைரஸ் மாறி ஒரு மனிதன் கிட்டேந்து இன்னொரு மனிதனுக்கு பரவிகிட்டே இருக்கு. எடுத்துக்காட்டோட சொல்லனும்னா இரண்டு கண்டம் இருக்கு ஒரு கண்டத்துல இருக்குற பழங்குடி தினமும் நீர் அருந்த 10 மைல் நடந்து பொய் ஒரு நதியிலே நீரை குடிக்கிறான். ஆனா அதே நேரத்துல இன்னொரு கண்டத்துல வாழுற மனிதன் ஏன் தினமும் நான் இவ்வளோ தூரம் நடக்கணும் யோசிச்சு வாய்க்கால் வெட்டி தன் இருப்பிடம் அருகிலேயே அந்த நதிய எடுத்துட்டு வரான், இது தான் ஆறாம் அறிவு. இது ஒரு இயற்கை சிதைப்பு. எப்ப இந்த மனுஷன் அவனை சந்திக்கிறானோ அப்பொழுதே இந்த ஆறாம் அறிவு என்னும் கிருமி அவனையும் தொத்திக்கிது. இன்னைக்கு வரைக்கும் இதுலேந்து சென்டினலீஸ் இந்த வைரஸ் கிட்டேந்து தப்பிச்சிட்டாங்க.
சரி இந்த ஆறாம் அறிவு ஏன் ஒரு கூட்டத்துக்கு மட்டும் முதல கிடைச்சுது ? இது இயற்கையான பரிணாமத்தோட விளைவா ? கண்டிப்பா கிடையாது அவன் இருக்கும் இடத்தின் அமைப்பை வைத்து இந்த அறிவு கிடைச்சுதுனு சொல்லுறது எல்லாம் ஏற்புடையது அல்ல. ஏன்னா அப்படி இருப்பிடத்தை கொண்டு மூலைல ஆறறிவு உண்டானதுனு சொன்ன ஏன் அந்த இடத்தில் இருந்த மனித இனத்துக்கும் மட்டும் இது நிகழ்ந்தது ? ஏன் அதே இடத்தில் வாழ்ந்த மற்ற எந்த விலங்குகளும் இந்த இயற்கைக்கு எதிரான ஆறறிவு கிடைக்கல ?
கண்டிப்பா இந்த ஆறறிவு இந்த நிலத்தையோ இல்ல இந்த பரிணாமத்தையோ சார்ந்தது கிடையாது. எதோ ஒரு external factor இந்த இனத்துக்கு இந்த அறிவை தந்து ஆறறிவின் வளர்ச்சிய கண்டு ரசிக்கிது.
நாம நினைக்கிறோம் இங்க நடக்குற போர் நமக்கும் அவுங்களுக்கும்ன்னு, ஆனா உண்மையாவே இங்க நடக்குற போர் மனித இனத்துக்கும் இயற்கைக்கும் தான்.
பொறுத்து பொறுத்து பாத்து மொத்தமா டைனோஸர போட்டு தள்ளுன மாறி ஒரு நாள் போட பொது. அன்னைக்கு இவனோட சித்தாந்தம் என்ன, அவனோட கருத்தியல் என்னன்னுலாம் இந்த பிரபஞ்சம் பாக்கது. பிரபஞ்சத்துக்கு முன்னாடி என்ன கருத்தியல் ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.