பட்டியல் வெளியேற்ற சட்டம் என்பது பாசக கையில் உள்ளது. பாசக நினைத்தால் ஒரு மணி நேரத்தில் சட்டம் போட முடியும்.
ஆனால் கிருஷ்ணசாமி இரண்டு ஆண்டுகளாக மாநாடு மாநாடாக போட்டு, கடைசியில் பிரிட்டனையும் எதிர்த்து காலம் தாழ்த்தினார். இன்று ஜனவரி கடைசியில் இன்னொரு மாநாடு போடுவோம் என அறிவித்துள்ளார்.
பாசக ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய சட்டத்தை, யாரை எதிர்த்து மாநாடு போட்டு தேர்தல் வரை இழுக்கிறார் கிருஷ்ணசாமி?
பாசக ஆர்.எஸ்.எஸோடு கிருஷ்ணசாமி இணைந்தது பட்டியல் வெளியேற்ற சட்டத்திற்காக என நினைத்தது கடைசியில், ஏப்ரல் மாத பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட்டுக்கும், பாசக வாக்கு வங்கியை அதிகரிக்க பள்ளர் சமூகத்தை அடகு வைக்கும் ஓட்டரசியல் பிழைப்பே என்பது இன்று அம்பலமாகி விட்டது.
பள்ளர் மக்கள் கிருஷ்ணசாமியை கழட்டிவிட்டு, பட்டியல் வெளியேற்ற சட்டத்திற்கு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.