கருடக்கிழங்கு என்பது ஒரு மூலிகையாகும். இது பார்ப்பதற்கு கருடன் சிறகை விரித்துப் பறப்பைதைப் போல் இருக்கும்.
இந்தக் கிழங்கை வீட்டு வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் எதுவும் வராது. கருடக் கிழங்குக்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது.
இந்த கருடக்கிழங்குகள் எல்லா இடத்திலும் விளையாது. கருடன் எந்த இடத்தில் வட்டமிடுகிறாரோ அந்த இடத்தில் தான் இந்த கிழங்கு வளரும்.
அதற்காக கருடன் வட்டமிடும் இடங்களில் எல்லாம் இந்த கிழங்கு வளரும் என்று அர்த்தமில்லை.
அந்த வகையில் தமிழகத்தில் சதுரகிரி மலையில் மட்டுமே கருடக்கிழங்கு விளைவதாக சொல்கிறார்கள். அந்த மலையில் கருடன் அடிக்கடி வட்டமிடும் பகுதியில் சென்று இந்த கிழங்கை தோண்டி எடுத்து வருகிறார்கள். பிறகு அவை சுத்தம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
நாட்டு மருந்து கடைகளில் கருடக்கிழங்கு விற்பனை செய்யப்படும். ஆனால் அதிலும் போலியான கருட கிழங்குகள் வந்துவிட்டன. எனவே பார்த்து வாங்க வேண்டும்.
கருடக்கொடி மிகவும் விசித்திரமானது.
கருடக் கொடியைக் கையில் வைத்திருப்பவர்கள் நோய், நொடி, எதிர்மறை சக்திகள் எண்ணங்கள் முதலியவைகளுக்கு உட்படமாட்டார்கள்.
கருடக்கொடி பெரிய கனமான இரும்புகளையும், திறக்காத பூட்டுக்களையும் பட்டென விடச் செய்யும்.
தொன்மையான இனங்கள் வாழும் நாடுகளில் கருடக் கொடியை மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த அபூர்வ சக்தியாகக் கருதுகிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.