26/04/2019

அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் தமிழீழக்கடல்...


ஓரே நேரத்தில் தமிழீழத் தலைநகராக அறியப்பட்ட திருகோணமலையை மையப்படுத்தி அந்நிய நாடுகளின் தொடர் ஆக்கிரமிப்புகளும் தமிழர் நில, கடல் வள சுரண்டல்களும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மன்னார் வளைகுடா பகுதிகளில் இருக்கும் எண்ணெய் வளத்தை திருடும் ஒப்பந்தத்தை தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்க இனப்படுகொலை இராணுவ அரசு நோர்வே, இந்தியா நாடுகளுக்கு வழங்கி வந்தது.

தற்பொழுது, யாழ் முதல் மட்டக்களப்பு வரையிலான கிழக்கு கடல் பகுதிகளில் எண்ணெய் வளத்தை திருடும் ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளது. எண்ணெய் வளத்தை ஆய்வு செய்யும் பணியை சீன கப்பல் நிறுவனம் செய்து வருகிறது.

இதேவேளை, திருகோணமலையில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளின் கூட்ட கடல் இராணுவப்பயிற்சிக்காக இந்த நாடுகளின் இராணுவக் கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளது.
தொடர்ச்சியாக தமிழர் பகுதிகளை பல நாட்டு இராணுவ முற்றுகைக்குள் வைத்திருக்கவும், அதேவேளை, தமிழர் நில, கடல் வளங்களை சுரண்டும் சதிகளும் நடைபெற்று வருகிறது.

பல கோடி செலவு செய்து பல லட்சம் தமிழர்களை கொன்ற ஈழப்போருக்கு பின் இருக்கும் காரணங்களில் முக்கியமான ஒன்று இது.

ஈழப்போருக்கு காரணமாக இருந்த 13 எண்ணெய் கிணறுகள் அவைகளின் பெயர்கூட தமிழர் பெயர்கள் தான் ''காவிரி பேசின்'' ''மன்னார் பேசின்''

எண்ணெய்; கப்பல் போக்குவரத்து; ராணுவ தளம் ஆகிய மூன்றும் பெரும் காரணம் என்பதை நிச்சயம் புலிகள் அறிவார்கள்.

ஈழம், நெடுவாசல், கதிரமங்கலம்..

- தமிழர் ஆய்வுக் கூடம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.