26/04/2019

வள்ளுவத்தின் வீழ்ச்சி புத்தகத்தில் இருந்து...


சங்கதமாக்குதல் (Sanskritisation) என்பதே ஒருவகையான திருட்டு போல உள்ளது.

உண்மையை மறைப்பது, வரலாற்றைத் திரிப்பது,  பொய்யுரைப்பது, அரசியல் செய்வது என்று பல உள்நோக்கத்தோடு இவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைப் பற்றி பக்கம் 417 -இல் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது:

"சங்கதமாக்கம் என்னும் பெயரிலேயே தமிழ்த் தெய்வங்கள் ஆரிய மயமாக்கப்பட்டன.

இவ்வாறே, தமிழரின் வரலாற்று நாயகர்களும் தலைசிறந்த முனிவர்களும் சங்கதப்படுத்தப்பட்டனர்.

அகத்தியன் என்ற தமிழ் மாமுனியும் ஆரியமயமாக்கப்பட்டார்.  தமிழரின் பெருந்தெய்வங்களும், சிறுதெய்வங்களும், பெண் தெய்வங்களும், போர் தெய்வங்களும்கூடச் சங்கதப்படுத்தப்பட்டன.

பாகத மொழியில் 'விண்ஃஉ' (Vinhu) என்றிருந்ததே விஃழ்ணு (Vishnu) என்றானது.

விண்டு என்னும் தமிழ்ப்பெயரின் திரிபுகளே அவையாகும்.

அதேபோல், 'கண்ஃஅ' (Kanha) என்றிருந்ததே சங்கதத்தில் 'கிருஃழ்ண' (Krishna) என்று திரிந்தது.

'கண்ஃஅ' என்பது கண்ணன் என்னும் தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே என்பதைச் சொல்லித்தானா தெரிய வேண்டும்?

தமிழிலிருந்த மூலப்பெயர்களைச் சங்கதப்படுத்தியதனால் வரலாறே குழப்பப்பட்டுத் திசை திருப்பப்பட்டது.

ஆந்திரன் என்ற காரணத்தாலேயே கண்ணன் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறுவர்.

இருக்கு வேதத்தில் இக் கண்ணன், இந்திரனுக்குப் பகைவனான ஓர் அரக்கன் ஆவான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.