இலங்கையில் நடைபெற்ற பயங்கர வாதத்தை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவத்திற்கான மத மோதலாக என்னால் பார்க்க முடியாத நிலையில் இந்த சம்பவம் சர்வதேச மற்றும் இலங்கை தேசிய ராணுவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கை இல்லாமல் இதுபோனன்ற செயல்கள் நடை பெற சாத்தியமே இல்லை. குறிப்பாக தேர்தல் வரும் காலம் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் ராஜபக்சே ஆதரவுடன் தான் இதை நடந்து இருக்கலாம். கோத்தபைய ராஜபக்சே இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம். பொளத்த பேரினவாதம் கடந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது என்பதுடன் தமிழ் கிறிஸ்தவ மக்கள் மீது தேவாலங்களில் நடைப்பெற்ற இந்த தாக்குதல் எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த அவர்கள் உள்நாட்டு சிறு குழுக்களையும் அவர்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சக்திகள் பயன்படுத்தி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தவிர வேறு காரணங்கள் ஒரு போதும் இல்லை. மிக முக்கியமாக இலங்கை முஸ்லிம்கள் இடையே தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு எந்த விதத்திலும் பகைமை சச்சரவுகள் இல்லாத நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் என்னை மிகவும் யோசிக்கத் தூண்டியது என்பது தான் ஊண்மையாகும்...
https://www.newsu.in/?p=2355
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.