இன்று பிரான்மலை என்று மருவி
வழங்கபடுகிறது.
பாரி மன்னர் நினைவாகப் பாரிவிழா
நடந்த மலைச்சாரல் இதுவே.
இம்மலையில் எழுப்பப்பட்டிருக்கும்
புகழ்பெற்ற சிவனார் திருக்கோயில்
கல்வெட்டில் "பாரீச்சுரம்" என்று
குறிக்கப்பட்டுள்ளது.
பாரிநாடு,பறம்புநாடு,பறநாடு என்றெல்லாம் வழங்கப்பட்டுள்ளது.
தேவாரத்தில் 'திருக்கொடுங்குன்றம்'
என்றும் உள்ளது.
இன்று பிரான்மலை என்ற பெயரே
நிலைபெற்றுவிட்டது.
இன்று இப்பழம்பெரும் தமிழர் வரலாற்று
நினைவுச்சின்னமாக நிமிர்ந்து நிற்கும்
பாரிமலைக்குக் கேடு சூழ்ந்துவிட்டது.
மலையை உடைத்து கல்குவாரி அமைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.
அரசு உயர் பதவிகளில் நிறைந்த
பொருளீட்டியவர்கள்.
மாநில மைய அரசியல் செல்வாக்கும் பெற்றவர்கள்.
இவர்கள்தான் இந்தத் திருப்பணியைச்செய்யப்போகிறார்கள்.
மக்கள் போராட்டத்தால் மதுரை "யானை மலை" காப்பாற்றப்பட்டது போல்
இம்மலையும் காப்பாற்றப்படவேண்டும்.
இதில் இனஉணர்வாளர்களுக்கு
இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.
பிரான்மலை(பாரிமலை)பாதுகாப்புப்
போராடங்களில் அனைவரும்
பங்கேற்கவேண்டுகிறேன்.
ஒருங்கிணைப்பாளர்:
தன்னலமற்றத்
தமிழர்தேசியர்,
செ.கர்ணன்
பிரான்மலை
9345244945
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.