ஒப்பந்த விவசாயம்.
பதுக்கல் சுதந்திரம்.
உணவுப்பொருள் இனி அத்தியாவசிய பொருள் இல்லை.
இதுதான் சுருக்கமாக புதிய வேளாண் சட்டம்...
பெருநிறுவனங்கள் விவசாயிகளுடன் நிலத்துக்கு ஒப்பந்தம் செய்வதன்மூலம், விவசாயி என்ன விதைக்க வேண்டும் என்பது முதல் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பதுவரை இனி பெருநிறுவனங்களே முடிவு செய்யும்.
பெருநிறுவனங்கள் இந்தியாவின் எந்த பாகத்திலிருந்தும் எவ்வளாவு விவசாய பொருட்களையும் எந்த விலைக்கும் வாங்கி பதுக்க முடியும்.
விவசாய பொருட்கள் இனி அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதால் மெல்ல ரேஷன் முறை மறையும்...
இயற்கை பேரழிவுகளின் போது மக்களுக்கு உணவு வழங்குவதுகூட அரசின் கடமையாக இருக்காது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், உணவு பொருட்களை வெள்ளையர் மொத்தமாக கொள்முதல் செய்து இங்கிலாந்துக்கு கடத்தியதால் இந்தியாவில் ஏற்ப்பட்ட கொடிய பஞ்சமும் லட்சக்கணக்கான பட்டினிச் சாவுகளும் இங்கே எண்ணிப்பார்க்கத்தக்க ஒற்றுமைகள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.