08/12/2020

தாந்திரீக கட்டு செயல்முறை...

 


திருமூலரின் திருமந்திரத்தில் பல தாந்திரீக இரகசியங்கள் உள்ளது, அவை சூத்திரங்களாக உள்ளது அதை சரியாக புரிந்து கொண்டால் , இதை பிரயோகம் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்..

ஒருவரை உச்சாடனம் செய்ய அவர் சொல்லும் ஒரு கிரியை இந்த பாடலில் கவனியுங்கள் ; உச்சாடனம் என்றால் எவரையும் (தீய மனிதர்களையும் , துர் தேவதைகளையும்) நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது.

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்

பாங்கு படவே பலாசப் பலகையிற்

காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு

ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

975 பாடல்...

(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.

(அ. சி.) கோட்டம் - கோவில். காங்கு அருமேட்டில் - வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு - கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு - கடுகு - கடு + கு - சிறுத்தவிடம்.

இதில் சொல்லப்படும் துர்தேவதைகள் யார் தெரியுமா?

உங்க குலதெய்வங்கள் எனும் முன்னோர்கள் தான்..

இப்போது புரிகிறதா ?

குலதெய்வ கோவிலில் குதிரையில் சாத்தன் வந்த இரகசியம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.