08/12/2020

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே...

இப்போது அந்த ரயிலின் பெயர் TN43. ஒரு up & down  ரயில்வேக்கு வாடகை தொகை ரூ.5 லட்சம். ஜனவரி 3 ம் தேதி வரை வாடகைத் தொகையை தனியார்  நிறுவனம்  ரயில்வேக்கு கட்டிவிட்டது. 

இந்த  ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல  ஒரு இளம் வயது பணிப்பெண் நியமித்து இருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பாக்கெட், ஒரு வாட்டர் பாட்டில் இலவசம்.  அரசு ரயில்வேயின் பழைய  கட்டணம் ரூ.30/-, தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000/- .

இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை டிமான்டை பொருத்து  ரூ. 8000 முதல் ரூ.12000 வரை இருக்கும் என அந்த நிருவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் ஓப்பன் பண்ணிட்டாங்க. ஊட்டி ரயிலில் ஒரு குடும்பம் மே மாதம் டூர் போய் வர ரூ.1 லட்சம் செலவு ஆகும் 

ஊட்டி ரயில் இனி கனவுதான்.தனியார் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆனது அல்ல என்பது நிரூபனம் ஆகிவிட்டது..

இதை பற்றி பேச வேண்டிய ஊடகம்.. 

ரஜினிக்கு கழுவி விட்டுகிட்டு இருக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.