08/12/2020

அரசு சாரா நிறுவனங்களில், ஆர்எஸ்எஸ் தான், வெளிநாட்டு நிதியைப் பெறுகிறது...



வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ் தான்! மதவாதத்தையும், வெறுப்பையும் பரப்புவதன் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும்.

 இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்ற தகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்ற உண்மையை, “அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள்” என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப்பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச்சூழல், கட்டுமானத் தொழிலாளர் கள்துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.

உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக்கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே “வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி” என்ற தலைப்பில், ஆர்எஸ்எஸ் தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை,

“வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து” என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்காவின் நிதி, எப்படி ஆர்எஸ்எஸ்ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசியலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வ மாக அந்த அறிக்கை முன்வைத்தது.

பலலட்சம் கோடி டாலர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு சென்றுள்ளதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,

என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.நாட்டில் அரசு சாரா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்எஸ்எஸ்-ஸின் அந்நிய நிதி பின்னணிகுறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ-யின் உயர்மட்ட உளவுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திரமோடி அரசு விசாரிக்குமா?

அந்த விசாரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியிலிருந்து தான், இவ்வளவு காலமாக வும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக் கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்எஸ்எஸ் மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.