30/04/2017

பாஜக பொன். ராதாகிருஷ்ணன் Vs வைகோ நாயூடு...


குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

பாஜக தமிழிசை தமிழை காப்பாத்த போகுதாம்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா சாதனை...


பிரான்ஸ் நாட்டின் தண்ணீரை குடிக்கும் விராட்கோலி : ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.600...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி குடிப்பதற்கான தண்ணீர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரவழைக்கப் படுவதாகவும், அதன் விலை 1 லிட்டர் ரூ.600 எனவும் தெரிய வந்துள்ளது...

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=298483

பாஜக மோடி எனும் டூபாக்கூர்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 46...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பகுதி 46-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். 46-ம் தீர்க்க தரிசனப் பகுதி பல முக்கிய குறிப்புகளை கொண்ட தொகுப்பாகும்.

46-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் குறிப்பானது மிக, மிக முக்கியமான ஒரு செய்தி தொகுப்பாகும். அதாவது இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்ட பல புனித ஆத்மாக்கள் சூட்சும வடிவில் உலாவும் அற்புதமான ஒரு நேரமாக தற்போது விளங்கும் என்றும், அது இந்த 46-ம் தீர்க்க தரிசனம் வெளிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த அற்புத நிகழ்வு துவங்கும் என்றும், உலக வரலாற்றில் இவ்வளவு புனித ஆத்மாக்கள் இதுவரை ஒரே சமயத்தில் வெளிப்பட்டு மக்களுக்கு காட்சி கொடுத்த சம்பவம் நடைபெறவில்லை என்றும், இதுவே பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக அமைய உள்ளதாக 46-ம் தீர்க்க தரிசனம் ஒரு அற்புத குறிப்பை இங்கு தெரியப்படுத்துகின்றது.


மலேசியா நாட்டில் கடல் சார்ந்த அழிவுச்சம்பவம் ஒன்று தற்சமயம் நடக்க உள்ளதாகவும், இச்சம்பவம் இயற்கை சீற்றத்தால் நிகழக்கூடிய பெரியச்சம்பவம் என்று 46-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


மகா சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் ஒன்று கானா தேசத்தில் கண்டெடுக்கப்படும் என்றும், அது அக்காலத்திலேயே மிக, மிக அரிய உலோகத்தால் செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் என்றும், அது கண்டெடுக்கப்படும் தருணத்தில் உலகத்தின் ஒரு மூலை சிறிது உயரும் என்றும், அதன் மற்றொரு மூலை சற்று கீழே தாழும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உண்மை விசுவாசிகளாக விளங்கக்கூடிய தருணம் இதுவென்றும், இறைவனின் உண்மையை மக்கள் முழுமையாக உணரும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், மக்கள் தங்களை தாங்களாகவே மாற்றிக் கொள்ளும் ஒரு அற்புத காலமாக இக்காலம் இருக்கும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

புத்தர் பிறந்த தேசத்தில் ஒரு மகா பொக்கிஷம் கண்டெடுக்கப்படும் என்றும், அச்சமயத்தில் புத்தமதத்தை சார்ந்த ஒரு ஞானி தன் உயிரை தனது இனத்திற்காக தாரை வார்க்கும் ஒரு துன்ப நிகழ்வு நடக்கும் என்றும், அச்சமயத்தில் சீனா, திபெத் இடையே ஒரு புரட்சி வெடிக்கும் என்றும், அப்பொழுது சீன தேசத்தில் ஒரு மிகப்பெரிய அழிவுச்சம்பவம் நிகழும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகின்றது.

மலைவாழ் மக்கள் ஒன்று கூடி ஒரு மிகப்பெரிய விழாவை தமிழகத்தில் நடத்துவார்கள் என்றும் அச்சமயத்தில் ஆதிபராசக்தியின் அற்புத திருவிளையாடல் ஒன்று அந்த மக்களிடத்தில் அன்னை நிகழ்த்துவார் என்றும், இது உலக மக்களையே திரும்பி பார்க்கச் செய்யும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இளையோர் சம்பந்தப்பட்ட அமைப்பு ஒன்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை மக்களிடையே கொண்டு வர முற்படுவார்கள் என்றும், இதனால் சில நாட்கள் கூச்சல் குழப்பங்கள் நிகழக்கூடும் என்றும், இதனை அரசு கண்டறிந்து தடுக்கும் என்றும், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படும் ஒரு மகா சக்தி வாய்ந்த இயக்கம் இருப்பதை கண்டு நாடே வியக்கும் என்றும், அதனை அரசு முழுமையாக தனது அதிகாரத்தால் அடக்கும் ஒரு நிகழ்வு நடக்கும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

புன்னகை மன்னன் ஒருவரின் மரணம் தற்செயலாக நடந்து முடியும் என்றும், இதனால் ஒரு புதிய குழப்ப நிலை நாட்டில் உருவாகும் என்றும், இதனை சிலர் புரளியாக செய்திகளை பரப்புவார்கள் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை வெளியிடுகின்றது.

செல்வம், புகழ், அந்தஸ்து என்பவை நிலையானவை அல்ல. மனிதனுக்கு மரணத்தை விட கொடியது ஏதும் இல்லை என்று கூறி, உங்களை காத்துக்கொள்ள உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஒரு நடிகர் தனது பிரச்சாரத்தை நாட்டில் துவங்குவார் என்றும், அச்சமயத்தில் நாட்டில் ஒரு அரசியலில் மாற்றம் நிகழக்கூடிய சூழல் ஏற்படும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மகா அவதார் பாபாஜியின் அற்புத காட்சிகள் இந்தியா முழுவதும் தென்படும் என்றும், இதனால் ஆன்மீக மக்களுக்கு ஒரு புது உற்சாகம் ஏற்படும் என்றும்,  யோகா அமைப்புகளில் இவரின் வழிகாட்டுதல்கள் அப்பொழுது துவங்கும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சுகர் மகரிஷியின் தரிசனம் தென் தமிழகத்தில் உள்ள ஒரு சிவாலயத்தில் தென்படும் என்றும், சைவ சித்தாந்தம் அங்கு மீண்டும் புதுப்பொழிவு பெறும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


குதம்பை சித்தரின் அற்புதம் ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைத்தொடரில் வெளிப்படும் என்றும், அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட இருவர் ஒரு யோகா மையத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் வழியாக குதம்பை சித்தர் பல விஷயங்களை உலகத்திற்கு வெளிப்படுத்துவார் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கடுவெளி சித்தரின் காலப்பயணம் முடிவுற்று அவரது பிரவேசம் தென் சென்னையில் துவக்கம் பெறும் என்றும், அச்சமயத்தில் சென்னை மழை நீரால் பெரும் சோதனைக்கு ஆளாக நேரிடும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உண்மையான மதம் எங்களுடையது என்று இந்திய தேசத்தில் ஒரு சில மத அமைப்புகள் தங்களுடைய குரலை உயர்த்தும் என்றும், ஆனால் அரசு அதனை பலங்கொண்டு கட்டுபடுத்தும் என்றும், அச்சமயத்தில் மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் நிகழும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இமயத்துள் அமர்ந்து தவமியற்றும் இறைவன் சிவனார் தனது அற்புத திருவுருவக் காட்சியை 3 இடங்களில் பதிய வைக்கும் அற்புத நிகழ்வு நடக்கும் என்றும், இதுவரை உலகத்தில் பதிவாகாத அற்புத இறை அதிசயம் இதுவாக இருக்கும் என்று 46-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

தமிழுக்காகக் களமிறங்கிய சுந்தரனார்...


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்.

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்.

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்.

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்.

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

இவைதான் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்ட வரிகள்.

அதாவது பல்வேறு உயிரினங்களையும் உலகங்களையும் படைத்த பரம்பொருள் போல.

கன்னடத்தையும் தெலுங்கையும் மலையாளத்தையும் துளுவையும் படைத்துவிட்டு ஆரியம் போல வழக்கொழிந்து போகாமல் நிலைத்திருக்கும் தமிழை வாழ்த்துகிறார் சுந்தரனார்.

சமஸ்கிருதத்தையும் திராவிடத்தையும் விட தமிழை உயர்ந்ததாக கடவுளாக உயர்த்திக் கூறும் இவ்வரிகள் ஏன் நீக்கப்பட்டன?

தமிழன் தமிழகத்தை ஆளவில்லை,
ஆள்பவனெல்லாம் வந்தேறி, அதனால் நீக்கப்பட்டன.

யார் இந்த சுந்தரனார்?

இதோ அறிந்துகொள்ள முற்படுவோம்..

ஆழப்புழை துறைமுகமாகவும் வணிகத்தலமாகவும் வளர்ந்த 1790கள்.

களக்காட்டிலிருந்து ஆழப்புழாவிற்கு தொழில் காரணமாகக் குடிபெயர்ந்த வெள்ளாள குடும்பத்தில் பிறந்து சைவ தீட்சை பெற்றவர்தான் பெ.சுந்தரம்.

ஆழப்புழையில் இருந்த தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை நடத்தினர். அதிலும் சைவத்தைப் பின்பற்றியவர்கள் பல தலைமுறைகளாக தமிழை மறக்காமல் போற்றி பாதுகாத்து வந்தனர். பெ. சுந்தரனார் அங்கே பிறந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.

மலையாளச் சூழலில் பிறந்திருந்தாலும் இவர் இளவயதிலேயே தமிழ் மீது பற்று கொண்டவராக இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்காமல் மலையாள மண்ணில் பிறந்துவிட்டோமே என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.

அதனால் மனோன்மணியம் நாடகத் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் தமிழையே கடவுளாக்கி தமிழ்த் தெய்வ வணக்கத்தோடு துவங்குகிறார்.
அதில் அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறார்.

ஆழப்புழாவில் தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வி முடித்து பிறகு ஆங்கில வழி கல்வியும் பெற்றுள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் மன்னர் கட்டிய மகாராஜா கல்லூரியில் வரலாறும் தத்துவமும் படித்துள்ளார்.

இவர் படித்த மலையாள சூழலில் தமிழுக்கு இருந்த இடம் குறைவு. ஆனாலும் இவர் எப்படி இவ்வளவு ஆழமாகத் தமிழ் கற்றார் என்பது இன்று வரை தெரியவில்லை.

பிறகு திருநெல்வேலி வந்து ம.தி.தா இந்துப் பள்ளியில் தலைமைப் பொறுப்பில் 1877-1878 வரை இருந்திருக்கிறார்.

இந்நேரத்தில் மகாராஜா கல்லூரியில் ராபர்ட் ஹார்வி என்ற தத்துவ  பேராசிரியர் இங்கிலாந்து திரும்பியதால் திருவனந்தபுரத்திற்கே மீண்டும் திரும்பி தான் படித்த அதே கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணிசெய்யத் தொடங்கிறார்.

திருவனந்தபுரம் தமிழர்களை இணைத்து சைவக் கழகம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அதுவே தமிழ் அறிஞர்கள் கூடும் இடமாகவும் இருந்தது. இவர்கள் பல மூலைகளியில் இருந்த தமிழ் அறிஞர்களுடன் கடிதத் தொடர்புடன் இருந்தனர்.

திருவிதாங்கூர் மன்னர்கள் ஆதரவைப் பெற்று தமிழை வளர்க்க பல முயற்சிகள் செய்துள்ளார்.

மகாராஜா கல்லூரியில் உ.வே.சா அவர்களுக்கு வேலை வாங்கித்தர முயற்சித்தார். உ.வே.சா மறுத்துவிட்டார்.
மறைமலையடிகளை திருவனந்தபுரத்திற்கு அழைத்து ஒரு பள்ளியில் தமிழாசிரியர்  வேலை வாங்கித் தந்துள்ளார். மறைமலையடிகளும் சில மாதங்கள் பணி செய்தார். கிறித்துவ காப்பியமான இரட்சணிய யாத்ரிகம் எழுதிய எச்.எ. கிருட்ணபிள்ளைக்கும் திருவனந்தபுரம் கல்லூரியில் வேலை வாங்கி தந்துள்ளார்.

சுந்தரனார் காலத்தில் நாடகத்தமிழ் பெரும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது. நாடக படைப்புகள் அத்தனையும் அழிந்து போய் இருந்தன.

மராட்டியரான கோவிந்தசாமி ராவ் இயற்றிய புஷ்பவல்லி, சமரச சன்மார்க்க சபையைச் சேர்ந்த சங்கரதாஸ் எழுதிய நாற்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள்,
காசிவிஸ்வநாத முதலியார் தாசில்தார் மற்றும் டம்பாச்சாரி போன்ற தெலுங்கு கலப்புடைய நாடகங்கள் என
தமிழகத்தில் நடந்த நாடகங்கள் சமஸ்கிருத, தெலுங்கு, ஆங்கில கலப்புடன் இருந்தன. மேலைநாட்டு பாணியில் இருந்தன. சில நாடகங்கள் தமிழில் இருந்தாலும் புரிந்துகொள்ள எளிமையாக இல்லை.

(அன்றைய நாடகத்துறையில் கதாநாயகனாக வலம் வந்தவர் திருவனந்தபுரம் தமிழரான டி.கே.சண்முகம்)

சுந்தரனார் யாருமே கவனம் செலுத்தாத நாடகத் தமிழை மீட்க முடிவுசெய்தார். தன் தமிழறிவையெல்லாம் கொட்டி ஒரு நாடகம் எழுதினார். அதுதான் மனோன்மணியம்.

இதற்காக அவர் லிட்டன் பிரபு எழுதிய நாடகங்களை திருவிதாங்கூர் அரசரிடம் கூறி வரவழைத்து படித்திருக்கிறார். அதில் The secret way என்ற கதை மிகவும் பிடித்துப்போனது. அந்த கதையின் மூலக்கருவை எடுத்துக்கொண்டு அதை தமிழ் சூழலுக்கு மாற்றி கதை உருவாக்கினார். 1891 ல் நாடகத்தை சென்னை வந்து ரிப்பன் பிரஸ் மூலம் அச்சேற்றி வெளியிட்டார்.

(இந்த மூல அச்சு திருவிதாங்கூர் அரசால் அழிக்கப்பட்டு விட்டது)

மனோன்மணியம் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அது எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் செழுமையான மொழிநடையிலும் இருந்தது. மிகவும் புகழ்பெற்றது.

திருக்குறள் பரவலாகாத அக்காலத்திலேயே 26 இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டப்பட்டு எழுதப்பட்டிருந்தது.

அதனால் மனோன்மணியம் சுந்தரனார் என்றே இன்று பெ.சுந்தரம்பிள்ளை அறியப்படுகிறார்.

இரண்டே ஆண்டுகளில் மனோன்மணியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம் பிடித்தது.

ஆனால் மேடையேறவில்லை.
சுந்தரனார் காலத்திற்குப் பிறகு சண்முகசுந்தர முதலியார் அதனை மேடையேற்றினார்.

1942 ல் மனோன்மணியம் திரைப்படமாகவும் வெளிவந்தது.

மனோன்மணியம் சேரநாடும் (கேரளா) பாண்டிய நாடும் (தென் தமிழகம்) நாஞ்சில்நாட்டுக்காக (கன்னியாகுமரி) மோதிக்கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னன் சேர மன்னனை தன் மகளுக்கு மணமுடிக்க விரும்புகிறான்.
அமைச்சரைத் தூதனுப்புகிறான்.
அமைச்சருக்கு தன் மகனே பாண்டியனுக்கு மருமகனாக வேண்டும் என்ற விருப்பம்.

எனவே சேர மன்னனை சந்திந்து பேசும் போது பாண்டியருக்கு சொந்தமான நாஞ்சில்நாட்டை சேரன் வைத்திருப்பதாக கூறு இருவருக்கும் இடையில் சண்டை மூட்டுகிறான்.

இதனால் போர் வெடிக்கிறது. சேரன் போரில் வெல்கிறான். அமைச்சர் தன் மகனுக்கு இளவரசியை திருமணம் செய்ய போட்ட திட்டம் பாண்டிய மன்னனின் குருவால் தடுக்கப்பட்டு இறுதியில் சேரனை பாண்டிய இளவரசி மணக்கிறாள். கதை முடிகிறது.

இதுவே கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைய 1950களில் திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தின் பழைய அரசியல் வடிவம்.

சுந்தரனார் என்னதான் மலையாள மன்னர்களுடன் இணக்கமாக இருந்தாலும். தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மலையாளிகளிடம் இருக்கிறதே என்கிற வருத்தம் அவருக்கு இருந்துள்ளது.

கதை எழுதுவதற்கு முன் பல்வேறு கோவில்களுக்கும் சென்று கல்வெட்டு ஆராய்ச்சி செய்துள்ளார்.

தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி கோட்டை (கரைக்கோட்டை) அருகே ஒரு கல்வெட்டைக் கண்டெடுத்தார்.

( கல்வெட்டு எழுத்துகளை படித்தறியும் அளவுக்கு அவருக்கு அகன்ற அறிவு இருந்தது என்பது இன்னொரு வியப்பு)

இந்த கல்வெட்டு 17 வரிகளைக் கொண்டது. விழிஞ்ஞத்தில் இருந்து புறப்பட்டு வந்த சேரப்படையெடுப்பை கரைக்கோட்டையில் எதிர்த்து போராடி  வீரமரணம் அடைந்த இரணகீர்த்திக்கு மாறஞ்சடையன் என்ற பாண்டியமன்னன் நட்ட நடுகல் ஆகும். இதன் காலம் கி.பி.792. கன்னியாகுமரி வரலாற்றில் இது ஒரு முக்கியமான சான்று ஆகும்.

சுந்தரனாருக்கு முன் கேரள வரலாற்றை எழுதிய மலையாளிகள் கொக்கசந்தேசம், கேரள மகாத்மியம், கேரளோப்பத்தி ஆகிய நூல்களைப் பின்பற்றி பரசுராமன் மழு எறிந்து உருவான நாடு என்ற புராணத்தையே பாடினர்.

சுந்தரனார் நாஞ்சில் நாட்டு மன்னர்கள் வரலாற்றை ஆராய்ந்து திருவிதாங்கூர் பண்டைய வரலாறு என்ற நூலை எழுதி
சங்ககாலத்தில் சேரர்களும், 9ம் நூற்றாண்டு வரை ஆய்மன்னர்களும்,
அதன்பிறகு சோழரும் பாண்டியரும்
அதன்பிறகு வேணாட்டு அரசரும் ஆண்டதாக வரலாற்று ரீதியான நூலை எழுதினார்.

இதன் கடைசி கட்டுரையான miscellaneous Travancore Inscriptions 18 கல்வெட்டுகளை விவரிக்கிறது.

இதில் 14 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் (9 வட்டெழுத்து வடிவம்).
3 ஆங்கிலத்தில் உள்ளன.
1 மலையாளக் கல்வெட்டும் உள்ளது.

திருஞானசம்பந்தரின் காலத்தை 'The age of Thirugnana sambandha a question of south indian archaeology' என்ற கட்டுரையில் சரியாக கணித்து சொன்னவர் சுந்தரனாரே.

பல வரலாற்று மாந்தர்களில் காலத்தை சரியாகக் கணித்து சொல்லி தமிழ் வரலாறு ஓரளவு தெளிவடைய உதவியாக இருந்துள்ளார்.

சம்பந்தர் கூன்பாண்டியனின் காலத்தவர் என்று ஏற்கும் சுந்தரனார், அவனது மனைவி கரிகால் சோழனின் தங்கை மங்கையர்க்கரசி என்பதை மறுக்கிறார். அதேபோல கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமாறனும் ஒருவரே என்பதையும் மறுக்கிறார்.

சம்பந்தர் கோச்செங்கண் சோழனையும் அவன் கும்பகோணத்திற்கு அருகே வைகல் எனுமிடத்தில் கட்டிய சிவன் கோவிலையும் பாடியுள்ளார்.

கி.பி.642 ல் இரண்டாம் புலிகேசியை வென்ற சிறுதொண்டர் வேண்டிக் கொண்டதால் சம்பந்தர் செங்கோட்டான்குடி பதிகத்தைப் பாடினார். இதற்கு கி.பி 640-649 ஐச் சேர்ந்த கல்வெட்டுச் சான்று உள்ளது.

இதையெல்லாம் வைத்து சம்பந்தரின் காலம் 7ம் நூற்றாண்டு என்று நிறுவினார்.

இதை உறுதிபடுத்த ஆதிசங்கரர் சம்பந்தரை த்ரமில (திராவிட) சிசு என்று கூறுவதை மேற்கோள் காட்டினார்.

கொல்லம் என்ற மலையாள ஆண்டுக்கணக்கு பற்றிய ஆராய்ச்சி கட்டுரையில்.. கொல்லம் ஆண்டு முன்பே தென்தமிழகத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை நிறுவியுள்ளார். அதில் சேரமான் இசுலாமுக்கு மாறியதும் கற்பனைக் கதை என்கிறார்.

சுந்தரனார் பத்துப்பாட்டையும் ஆய்வு செய்து 'The tamilian antiquary' என்ற கட்டுரை எழுதியுள்ளார்.

இதில் நக்கீரர் காலத்தை ஆய்வு செய்து நெடுநெல்வாடை எழுதிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டு மூத்தவர் என்று விளக்குகிறார்.

திருமுருகாற்றுப்படை, நெடுநெல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அதேபோல The date of Nambi andar nambi என்ற கட்டுரையில் பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி முதலாம் இராஜராஜன் காலத்தவர் என்பதை விளக்குகிறார்.

தத்தா நமரே காண் என்ற வாசகத்தைச் சான்றாக்குகிறார்.

இராமாயணத்தில் சாதி பற்றி ஆய்வு செய்தார். ஆனால் அவர் காலத்தில் அது வெளிவரவில்லை.

அவரது குறிப்புகளை பெற்றுக்கொண்ட வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.

கவிதைகளும் பல எழுதியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை, கணபதி ஆச்சாரியருக்கு எழுதிய மடல் போன்றவை குறிப்பிடத்தகுந்தன.

1855 ல் பிறந்து 1897 வரை 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சுந்தரனாரது பணி மறக்கவியலாதது.

சுந்தரனார் காங்கிரசில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக பேசியதால் ஆங்கில அடிவருடியான திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிரானார். சுந்தரனார் பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் திருவாங்கூர் போலீஸ் பறித்துக் கொண்டு போய் அழித்துவிட்டனர்.

தமிழக அரசால் இவரது படைப்பு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டு திருநெல்வேலி பல்கலைக்கழகத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவரது பாடலில்  ஆரியத்தையும் திராவிடத்தை விட தமிழை உயர்த்திச் சொல்லும் வரிகள் நீக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுவது நாம் இவருக்குச் செய்யும் கொடுமை ஆகும்.

திருவனந்தமபுரம் அருங்காட்சியகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் அவரது தெளிவான உருவப்படத்தை (எண்ணெய் ஓவியம்) மீட்டெடுத்து, அதனை அமையவிருக்கும் தமிழர்நாட்டு தேசிய அஞ்சல்தலையாக வெளியிடவேண்டும்.
அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும். அன்னாரது பெயரில் நாடகத் தமிழுக்கான விருது வழங்கப்பட வேண்டும்.

நாடகத் தமிழிலும் தமிழ்வரலாற்று ஆராய்ச்சியிலும் மொழியாய்விலும் முக்கிய பங்காற்றி தமிழ்த்தாய்க்கு தக்க காலத்தில் தக்க பணிவிடையைச் செய்த அப்பெருமகனாரைப் போற்றுவோம்.

தகவல்களுக்கு நன்றி:
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் (சிறுநூல்)...

இந்த சேட்டிலைட் பாஜக எஸ்.வி. சேகர் செருப்படி வாங்காத ஏரியாவே இல்ல போல...


ஒரு குழந்தை மரணித்த பிறகு உலகிற்கு சொன்ன அறிவுரை - கொடுமையின் உச்சக்கட்டம்...


சடகோ சகாகி...

இந்த கொடூரமான சம்பவத்தை படிக்கும் பொழுது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன் ...

சடகோ ஜப்பானில் நாகசாஹியில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உண்டான பிறப்பில் பிறந்த அமெரிக்கன் வெடிக்க செய்த அணுவில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி..

இவளுக்கு அப்பொழுது 2 வயது இருக்கும் வெடித்தவுடன் தோல்கள் உருகி ஓட கழுத்து எலும்பு முறிந்து..

மாடியில் இருந்து புல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டால்.

பின்னாளில் அக்குழந்தைக்கு 12 வயதாகும் பொழுது அணுவின் தாக்கம் அதிகமானதால் லோகேமியா என்ற கொடிய நோய் வந்தது.

அச்சிறுமியை மருத்துவனைக்கு அழைத்து சென்றார்கள்..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட அனுவின் கதிர்வீச்சால் லுகேமியா என்ற நோயினால்..

ஏறக்குறைய 40,௦௦௦ பேருக்கு 10 வருடங்களுக்கு பிறகும் அதன் தாக்கம் குறையாமல் பாதிப்படைந்துள்ளனர்..

இந்நிலையில் இந்த சிறுமிக்கும் உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து  கொட்ட ஆரம்பித்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்..

ஏற்கனவே மருத்துவனையில் இருந்த இன்னொரு சிறுமி இந்த சடகோ சிறுமியிடம் சொல்லுகிறாள்..

நீ காகிதத்தில் கொக்கு செய்ய வேண்டும் இவ்வாறு ஆயிரம் கொக்கு செய்து விட்டால் நீ சுகமடைந்து வீட்டிற்கு செல்லலாம் என்று மழலை கலந்து சொல்கிறாள்..

இந்த 12  வயது சடகோ சிறுமியும் தனது பிஞ்சி கைகளால் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள் ஒரு கட்டத்தில் காகிதம் தீர்ந்து போனதும் அருகே கிடந்த மருந்து சீட்டை கேட்டு வாங்கியும் சிறிய கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள்..

இப்படியாக 662 கொக்கு செய்ய்கிறாள் 662 வது கொக்கு தான் அவளது கடைசி காகித கொக்கு..

ஆம் அவள் 662 காகித கொக்கு செய்ததும் இவ்வுலகை விட்டு பிரிகிறாள் அந்த பிஞ்சி குழந்தை...

இந்த சம்பவம் ஜப்பான் நாடு முழுவதும் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது..

ஜப்பானில் உள்ள அணைத்து பள்ளியும் சமாதானத்தின் அடையாளமாக காகித கொக்கு செய்ய ஆரம்பிக்கிறார்கள் செய்து அதை மாலையாக கோர்த்து அந்த சிறுமியின் கல்லறையில் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்..

ஆயிரம் கொக்கு  நான் செய்து விடுவேன் என்று நம்பிய அந்த பாலகன் பாதியில் இறந்தது இதை கேள்வியுற்ற ஜப்பான் பள்ளி குழந்தைகள்..

ஆயிரம் என்ன கோடிக்கணக்கான காகித கொக்குகளையே நான் உனக்காக தருகிறோம் என்று காகித கொக்கு மாலையை அச்சிறுமியின் கல்லறையில் வந்து கட்டி விட்டு போனார்கள்.

அன்றைய காலத்து உலக குழந்தைகள்  தங்களது பாக்கெட் மணி யை சேர்த்து வைத்து ஜப்பான் அரசுக்கு அனுப்பி இந்த சடகோ சகாக்கிக்கு ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்றார்கள்.

அதன் அடிப்படையில் உருவானது தான் சடகோவின் நினைவு தூண்...

இன்றும் ஜப்பான் காட்சியகத்தில் மிகுந்த பாதிகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அணுவுலையும் வேண்டாம் அணு ஆயுதமும் வேண்டாம் அமெரிக்க ஏகாதிபத்திய உறவும் வேண்டாம் அமெரிக்க மாப்பிளை கனவும் வேண்டாம்....

நியூயார்க்கை பார்த்து பிரமித்து கொண்டு இருக்கையில் சடோகோ போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் குருதி நினைவில் வருகிறது...

மேலே சொன்னது அணு ஆயுத தாக்குதலால்.. அணு ஆயுதம் இருக்கிறது என்று வாய்கிழிய பேசி ஈராக்கை  நாசமாக்கி...

1 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் பட்டினி சாவையும் பார்த்த பிறகு நியூயார்க்கையோ லாஸ் ஏஞ்சல்ஸையோ பார்த்து பிரமிப்பு ஏற்படவில்லை காரி துப்பவே தோன்றுகிறது....

புகைப்படம்:

ஏதும் அறியா வயதான 2 வயதில் இருந்து 12 வயது வரை இவர்களின் அடக்கியாளும் அதிகாரத்தால் பாதிப்படைந்து வேதனையை அனுபவித்து இறுதியில் மூர்ச்சையாகி போன பிஞ்சு சடகோ சகாகி...

டெல்லியில் கைதான ஹவாலா தரகர் நரேஷிடம் ரூ.50 லட்சம் பறிமுதல்.. இடைத்தரகர் சுகேஷிடம் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணம் எனத் தகவல்...


JIO 4G LAPTOP...


ஆபர் மேல் ஆபர் வழங்கி கொண்டிருந்த JIO தற்போது புதிய முயட்சியில் இறங்கி உள்ளது.

அதிகுறைந்த விலையில் அறிமுகமாகும் Jio Laptop 4G Support செய்யும் வகையில் In-build 4G SIM Slot உடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அத்துடன் இந்த லேப்டாப் 13.3 inch அளவை கொண்டதாக உள்ளது. மேலும் 4GB RAM, WIFI, Bluetooth, USB, Webcam என்று பல்வேறு வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

பெரும்பாலும் இந்த லேப்டாப் எதிர்வரும் 2 மாதங்களில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

ஓபிஎஸ் சின் மாமா வேலை ஆரம்பம்...


இந்தியை பின்னுக்குத் தள்ளி இணைய பயன்பாட்டில் தமிழுக்கே முதன்மை இடம்...


கூகிள் நிறுவனமும் மற்றுமொரு தனியார் நிறுவனமும் நடத்திய அறிவியல் ரீதியான கருத்துக் கணிப்பில் இந்திய மொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் இருக்கும் மொழி தமிழ் மொழியே என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர்கள் இந்தியர்களை விட எட்டு மடங்கு எண்ணிக்கையில் குறைவாக இருந்தும் இணையத்தை தாய் மொழியில் பயன்படுத்துவதில் இந்தியர்களை விட அதிக அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது.

இனி வரும் காலங்களில் கூட தமிழ் மொழியின் பயன்பாடு இணையத்தில் இந்தியை விட அதிகரிக்கும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. இந்தி தான் ஆட்சி மொழி. இருந்தும் தமிழ் மொழி இணைய பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ?

தமிழ் மொழி தமிழகத்தை தாண்டி பிற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ளது.

மேலும் மலேசியா, மியன்மார் , மொரீசியஸ் போன்ற நாடுகளில் கணிசமாக பேசப்படுகிறது கற்பிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வளர்க்கப்படுகிறது.

இவையெல்லாம் தமிழ் மொழியை முன்னுக்கு கொண்டு செல்கிறது .

தமிழகத்தில் இப்போது தான் தமிழ் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. அதனால் வரக்கூடிய நாட்களில் இணையத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

தொடர்ச்சியாக நாம் எல்லா துறைகளிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்தால் நிச்சயம் உலக நாடுகளும் இந்திய அரசும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்பதிலும் ஐயமில்லை.

இணையம் முழுவதிலும் தமிழை நிரப்புவோம். தமிழ் மொழியை நம் அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கடத்துவோம். வாழ்க தமிழ். வளர்க தமிழர்...

இதை சொன்னா நம்மை ஆண்டி இந்தியன்னு சொல்வாங்க...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 46...


மரண விளிம்பில் 9 அனுபவங்கள்...

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல் - ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் - கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் – மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் - பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் – சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் – சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்  - ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல்  -அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் – அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார்.

அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.

அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

கீழடியில் ரவுடித்தனம் செய்த பாஜக தமிழிசை சௌந்திர ராஜன்...


கீழடியில் அகழ்வாராய்வு பணியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ வுமான முருகவேல் ராஜன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் மத்திய அமைச்சரிடம் மனு கொடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் கோஷம் போட்டதைப் பார்த்ததும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் வந்த 200க்கும் மேற்பட்டவர்கள், ஆர்பாட்டம் செய்தவர்கள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஒரு முன்னாள் எம் எல் ஏ விற்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.. காவல்துறை முன்னரே தாக்குதல் நடத்துகிறார்கள்...

இந்த தேசதுரோக பயங்கிரவாத பாஜக தமிழகத்தில் நுழைந்தால் என்னவாகும் சிந்தியுங்கள்...

இதுவும் டிஜிட்டல் இந்தியா தான்...


வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்...


வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீதான ராஜீய அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கேட்டுக் கொண்டார்.

அதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான், வட கொரியாவோடு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவிடம் இருந்து இன்னும் ஆத்திரமூட்டும் செயல்பாடுகள் வெளிப்படலாம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே லண்டனில் பேசியபோது எச்சரித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை மீண்டும் ஒரு பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

என்ன வகையான ஏவுகணை என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
தோல்வியில் முடிந்திருந்தாலும் கூட ஏவுகணை செலுத்தியதன் மூலம் சீனாவின் விருப்பத்தையும் பெரிதும் மதிக்கக் கூடிய அந்நாட்டு அதிபரையும், வட கொரியா அவமதித்துள்ளது. இது மோசம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுவரை வட கொரியா ஏவுகணை சோதனை குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

வட கொரியா மற்றும் தென் கொரியா இரண்டும் ராணுவ பயிற்சிகளை நடத்திவரும் நிலையில், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேற்று ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெற்ற வடகொரியா நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லர்சன், தனது அண்டை நாடுகள் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் நிஜமானது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் திறனை வடகொரியா மேம்படுத்தும் காலம் நீண்ட தொலைவில் இல்லை என்று டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், வடகொரியாவை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என மற்ற நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதே நேரத்தில், ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணத்துக்கு எதிராக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்தார்.

அதே போல், ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாதது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது...

நம்ப முடியாத உண்மைகள்...


https://www.unbelievable-facts.com/2014/02/skeleton-of-alien-looking-tiny-creature.html

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


அந்த ஆண்டி இந்தியன் பொம்ம என்ன விலை?

அது கண்ணாடி சார்...

அழியும் உடல் அழியாத ஆத்மா...


உணரும் ஆழ்நிலை இது உலகின் சூழ்நிலை.. உறங்கும் உன்னத நிலையில் உறங்காத ஆத்மா உணரும் வரை உனக்கும் எனக்கும் விமோசனம் இல்லை...

பாஜக டூபாக்கூர் மூடிட்டு போங்கடா...


பாக்கதான் ஆளு பொரி உருண்டை மாதிரி...ஆனா காமெடி நல்லா பண்ணுவாப்ள...


போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன்.. பாஜக பெண் எம்.பி. மிரட்டல் பேச்சு...


பாஜக பெண் எம்.பி., காவல்துறை அதிகாரிக்கு கடுமையாக மிரட்டல் விடுத்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று உத்தரப்பிரதேச பாஜக பெண் எம்.பி. மிரட்டிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இதைத் தொடர்ந்து பணி நேரத்துக்கு வராத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை, அனுமதியில்லாத மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. கேசர் சிங், வங்கி அதிகாரி ஒருவரை தாக்கிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ராவத், போலீஸ் அதிகாரியை கடுமையாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அவரை அணுகி பேட்டி எடுத்துள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கன்னியக்குறைவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், போலீஸ் அதிகாரி இந்த மாவட்டத்திலேயே இருக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பாஜக பெண் எம்.பி. பிரியங்கா சிங் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே போலீஸ் அதிகாரியை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

இவரே பாம் வைப்பாராம் இவரே எடுப்பாராம்...


பாஜக மத்திய கேடி அரசு, ஹிந்தியை எப்படியெல்லாம் திணிக்கிறது பாருங்கள்....


மோடியை இன்னுமாடா நம்புறீங்க...

இதுதான் கரடியே பாஜக மோடியை காறி துப்புன மூமன்ட்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 45...


மரணத்திற்குப் பின் என்ன?

ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியை க் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.

ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்....

அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.....

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

தந்திர- குண்டலினி யோகம்...


தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.

சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.

பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.

பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.

பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட
ஆற்றலை மேலே எழுப்பச்செய்து
முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள்
எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.

பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.

இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.

நாடிகள் -  நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர்
நாடியாகும்.

சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன. அவற்றில்
இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை
என்பவை மிகவும் முக்கியமானதாக
கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...

கோடநாடு பங்களாவில் இருந்து பணம் ஏதும் கொள்ளையடிக்கப் படவில்லை.. 5 கைகடிகாரங்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன - நீலகிரி எஸ்.பி...


நமசிவய எனும் மந்திரத்தை ஏன் உச்சரிக்க வேண்டும்? அதன் பயன் என்ன?


ந ம சி வ ய என்னும் இந்த ஐந்து எழுத்துக்களையும் நமது உடலின் ஐந்து பகுதிகளாக, நிலையங்களாக சித்தர்கள் கூறுகின்றனர்...

அவை இடநாடி, பிங்கலநாடி, ஆகிய பாதத்திலே "நம" என தொடங்கி, தோள்களில் "சி" யும் வாயில் "வ" வும் தலையில் "ய" வும் மண்டலம் கொள்கின்றன, இதுவே சித்தர்கள் உணர்த்தும் மிகப்பெரிய ரகசியம்..

நமசிவய எனும் பொழுது மூலக்கனலானது கீழிருந்து மேல் எழுகிறது, சிவாய நம என்னும் பொழுது மேலிருந்து கீழ் இறங்குகிறது இதனை பல சித்தர்கள் பாடல்களில் ஏற்றி இறக்குதல் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்...

இந்த கன்னடச்சிக்கு நேரம் சரியில்லை...


வட கொரியாவிற்கு ராணுவ பயிற்சி கொடுக்க மாட்டோம் - இந்தியா... பாஜக மோடி...


அது எப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இதைச் சொல்றே?

அவனுக்கு கத்து குடுக்கும் அளவுக்கு உனக்கு என்ன மயிரு தெரியும் ?

அவன் அமெரிக்காவையே  அழிப்போம்ங்கறான். தூசிக் காடா  மாத்திருவோம்னு சுட்டு விறல் நீட்டி   சொல்றான்.


நீ உன் வாயால் ஒருதரம் அப்படி  சொல்லேன்..  அட, சும்மா சொல்லித்தான் பாரேன்..

நீ பேசறததுக்கே  அவன் கிட்ட பயிற்சி எடுக்கணும். இதுல அவனுக்கு  ராணுவ பயிற்சி இந்தியா குடுக்காதாம்.... ஒழுங்கா போய்டு, நல்லா வருது என் வாயில...

பாஜக மோடி கலாட்டா...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 45...


உலக வரலாற்றில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனங்கள் இடம்பிடிக்க உள்ளதாக 45-ம் தீர்க்க தரிசனம் இன்று மெய்பட கூறுகிறது. உலகில் நடக்கும் வருங்கால நிகழ்வுகளைப் பற்றி இவ்வளவு விரிவாக எவரும் தீர்க்க தரிசனங்களை வெளிப்படுத்தவில்லை என்றும், இதுவே உலகில் முதன்மையானதாக விளங்கிடப் போவதாக 45-ம் தீர்க்க தரிசனப்பகுதி இங்கு எடுத்து கூறுகிறது. அதுமட்டுமின்றி இந்த 45-ம் தீர்க்க தரிசனம் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி இங்கு எடுத்துக் கூறுகிறது.

45-ம் தீர்க்க தரிசனம் இவ்வுலகில் பல புதுமைகள் நடந்திட இருப்பதாகவும், அவைகள் முழுக்க முழுக்க இறைவன் சார்ந்த புதுமைகளாக, இவ்வுலகம் முழுவதும் நடந்த  பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் என்றும், அந்த புதுமைகளில் ஒன்று இந்திய தேசத்தில், தமிழகத்தில், சேலத்தில் நடக்க இருப்பதாகவும், அனைத்து மதத்தினரும் ஒன்றிணையும் ஒரு சம்பவமாக இது இருக்கும் என்று 45-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகிறது.


புண்ணியங்கள் நிறைந்த தேசம் இந்திய தேசம் என்றும், அதற்கு இப்பூமியில் ஏற்கனவே அவதரித்து வாழ்ந்த மனிதர்களையே அது சாரும் என்றும், அந்த வகையில் இப்பூமியில் ஒரு மகான் பல அற்புதங்களை மக்களிடையே செய்து பேரும், புகழையும் அடைந்தார் என்றும், அவர் தற்பொழுது தனது சுயஉருவத்துடனே பல்வேறு இடங்களில் தோன்றி பல அற்புதங்களை செய்யும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்றும், அவரே முஸ்லீம், இந்து மக்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைவார் என்று 45-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு அதிசய குறிப்பை வெளிப்படுத்துகின்றது.


சூப்பர் நோவா என்ற கப்பலை ஒரு நாடு இரகசியமாக தயாரித்து வரும் என்றும், அதற்கு ஹிட்லரின் மகா கண்டு பிடிப்பை அந்நாட்டு அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தி வெற்றி காண்பார்கள் என்றும், அதனை முறையாக அவர்கள் பயன்படுத்தும் சமயத்தில் அதனை வேற்று கிரகவாசிகளால் கையாடல் செய்யப்படும் என்றும், அதன் பின்னர் தான் அதன் தொழில்நுட்பம் வேற்று கிரகவாசிகளுடையது என்றும், அக்காலத்தில் நாசிப்படைகளை கொண்டு ஹிட்லர் கைப்பற்றிய இரகசியம் தெரியவரும் என்று 45-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


கிறிஸ்துவ அமைப்புகளுக்கு இடையே ஒரு அச்சமான கருத்து நிகழ்வதாகவும், அது 666 என்ற எண்ணைப்பற்றிய கருத்து என்றும், அது சாத்தானின் எண் என்ற கருத்தும், அவர்களை அச்சமடைய அது ஒரு காரணமாக இருக்கும் என்றும், அதற்கான முழுவிளக்கத்தை உலக கிருஸ்துவ அமைப்பு ஒன்று முழுமையான விளக்கத்தை தரும் என்றும், இது உலக கிருஸ்துவர்கள் இடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இச்சமயத்தில் இயேசுவின் அற்புதம் ஒன்று பூமியின் மீது நிகழ்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 45-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


இந்திய சித்தர்கள் ஒன்றிணைந்து ஒரு மகா அற்புதத்தை சேலம் மலைப்பகுதி ஒன்றில் நிகழ்த்திட உள்ளதாகவும், அன்றுமுதல் உலக மக்களுக்கு அவ்விடம் ஒரு புனித இடம் என்று தெரிய வரும் என்றும், அந்த நாள் மிக, மிக சமீபமாக உள்ளது என்றும் 45-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


தருமபுரியில் ஒரு தங்கப்புதையலை மக்கள் கண்டெடுப்பார்கள் என்றும், அது இந்திய தேசத்தை சார்ந்திராத அதே சமயத்தில் எகிப்திய கலாசாரத்தை ஒத்த ஒரு கலாச்சார புதையலாக காணப்படும் என்ற அதிசய குறிப்பை 45-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

இறைவன், இறைவி என்ற கோட்பாடுகள் இந்து மதத்திற்கே உரிய வழிமுறைகள் என்றும், அந்த வகையில் உயரிய ஒரு புனித ஆத்மாக்கள் வழியே இறைவன் இவ்வுலகத்தில் பல அற்புதங்களை செய்ய உள்ளார் என்றும், இவர்களைப் பற்றிய குறிப்புகளை உலக மக்கள் இனி ஒரே சமயத்தில் வெளிப்படுத்திட உள்ளார்கள் என்ற குறிப்பை 45-ம் தீர்க்க தரிசனம் இங்கு எடுத்துக் கூறுகிறது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

போகன் படமும் உளவியலும்...


உயிர்த்தெழுகிறது பூதம்.. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப் போகிறார்...


எல்லோராலும் அநேகமாக மறக்கப்பட்டுவிட்ட அயோத்தி - பாபர் மசூதி இடிப்பு வழக்கு இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது.

முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை மறு விசாரணை செய்யும்படி உச்சநீதிமன்றம உத்தரவிட்டிருப்பது எதிர்பாராத திருப்பம்.

பாபர் மசூதியைத் தகர்ப்பதற்கு கரசேவகர்களைத் தூண்டியதாகவும், அதற்கான சதித் திட்டத்தை ரத யாத்திரை, பேச்சுகள், செயல்பாடுகள் மூலம் செய்ததாகவும்தான் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக அமைக்கப்பட்ட லிப்ரான் விசாரணைக் கமிஷன் பா.ஜ.க. தலைவர்கள்தான் கரசேவகர்களை மசூதியை இடிப்பதற்குத் தூண்டினார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில் தான் வழக்குத் தொடரப்பட்டது.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் தகர்க்கப்பட்டது.

பாபர் மசூதி தகர்க்கப்படுவதற்கு முன்னால், அந்த வளாகத்தில் கரசேவகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, சந்நியாசினி ரிதம்பரா உள்ளிட்ட பலரும் உரையாற்றியதால்தான், வெகுண்டெழுந்த கரசேவகர்கள் பாபர் மசூதியைத் தகர்க்க முற்பட்டனர் என்பதுதான் லிப்ரான் கமிஷன் அறிக்கையின் முடிவு.

கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சில சட்ட நுணுக்கங்களால் இரண்டு வெவ்வேறு வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னெளவில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் 22 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுரேந்திரகுமார் யாதவின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் இதுவரை 196 சாட்சிகள் அரசுத் தரப்புச் சார்பில் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரே பரேலியில் இதே சம்பவம் தொடர்பாக இன்னொரு வழக்கு விசாரணையில் இருக்கிறது. பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டியதாகவும், அதற்கான சதியில் ஈடுபட்டதாகவும் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, சந்நியாசினி ரிதம்பரா, பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் வினய் கட்டியார், விஸ்வ ஹிந்துப் பரிஷத் தலைவர்களான ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா ஆகியோர் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர்களில் கிரிராஜ் கிஷோரும், அசோக் சிங்காலும் மரணமடைந்து விட்டனர்.

ரே பரேலியில் நடக்கும் இந்த பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கை நீதிபதி லோவி யாதவ் விசாரித்து வருகிறார். இதுவரை 58 சாட்சிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி இரண்டு இடங்களில் தனித்தனியாக வழக்குகள் நடத்தப்பட்டதுதான் அயோத்தி பாபர் மசூதி வழக்கு 25 ஆண்டுகளாக எந்த முடிவுக்கும் வராமல் இழுத்தடிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். மத்திய புலனாய்வுத் துறை உடனடியாக மேல் முறையீடு செய்து வழக்குகளை இணைத்து விசாரிக்கக் கோரி இருந்தால் இத்தனை நாள் வழக்கு நீட்டிக்கப்பட்டிருக்காது.

உச்சநீதிமன்றம் இப்போது இரண்டு வழக்குகளையும் இணைத்து, லக்னெளவிலேயே விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இரண்டு ஆண்டு காலக்கெடு விதித்து, தினப்படி விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்கவும் கூறியிருக்கிறது.

மறு விசாரணைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடக் கூடாது என்றும், இந்த வழக்கு முடியும்வரை நீதிபதி இடமாற்றம் செய்யப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மத்திய அரசிலும், உத்தரப் பிரதேசத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடில்லை.

பாபர் மசூதி இடிப்பின் பின்னணியில் எந்தவிதத் திட்டமிடலோ, சதியோ இல்லை என்பதுதான் பா.ஜ.க. ஆரம்பம் முதல் எடுத்துவரும் நிலைப்பாடு. எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான சதிக் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பது கட்சிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டு சிறை தண்டனையைத் தலைவர்கள் எதிர்கொள்ள வேண்டும். வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் உமாபாரதி இனியும் மத்திய அமைச்சரவையில் தொடர முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.

அரசியலில் உயரிய பண்புகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப் போகிறார் என்பதை தேசமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

சதிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் இப்போதைய ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கும் ஒருவர். தார்மிகப் பொறுப்பேற்று அவர் பதவி விலகுவாரா இல்லை ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்ப முற்படுவாரா?

வழக்கை மேலும் இழுத்தடிக்க முடியாதபடி, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்துக்குப் பாராட்டுக்கள்...

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

வெளிநாடுகளில் தமிழர்கள் உயர் பதவிகளில்.. தமிழகத்தில் வேற்றினத்தார் பதவியில் கூடாதா?


வெளிநாடுகளில் தமிழர் உயர் பதவிகளை வகிப்பதைப் பெருமையாகப் பதிவிடுகிறீர்கள்.

இங்கே தமிழரல்லாதார் பதவியில் இருப்பதை ஏன் ஏற்கமுடியவில்லை?

இதற்கான பதில்...

வெளிநாடுகளில் தமிழர்கள் எத்தனை சதவீத எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ அதை விடக் குறைவாகவே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஒன்றிரண்டு அரசு பதவிகளிலோ, அத்திப் பூத்தாற்போல அமைச்சராகவோ நீதிபதியாகவோ தமிழர்கள் உயர்கின்றனர்.

அதுவும் கடின உழைப்பாலும் திறமையாலும்.

தமிழரல்லாதார் இங்கே எத்தனை சதவீதம் வாழ்கின்றனரோ அதற்கேற்றாற் போல பதவிகள் அதிகாரங்கள் பெறுவது தவறில்லை.

ஆனால், இங்கே தலைமை முதற்கொண்டு அத்தனை அதிகாரங்களும் வந்தேறிகள் கையில்.

3% பார்ப்பனன் நம்மை ஆளலாமா என்று கூறிவிட்டு... மொத்தமே 300 குடும்பங்கள் கூட தேறாத வந்தேறி சமூகங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றன.

இதில் கடல் கடந்து அகதியாய்ப் போய் திறமையால் உயரும் ஓரிரு தமிழரைப் பார்த்து பொறாமை வேறு...