கூகிள் நிறுவனமும் மற்றுமொரு தனியார் நிறுவனமும் நடத்திய அறிவியல் ரீதியான கருத்துக் கணிப்பில் இந்திய மொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் இருக்கும் மொழி தமிழ் மொழியே என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழர்கள் இந்தியர்களை விட எட்டு மடங்கு எண்ணிக்கையில் குறைவாக இருந்தும் இணையத்தை தாய் மொழியில் பயன்படுத்துவதில் இந்தியர்களை விட அதிக அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது.
இனி வரும் காலங்களில் கூட தமிழ் மொழியின் பயன்பாடு இணையத்தில் இந்தியை விட அதிகரிக்கும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. இந்தி தான் ஆட்சி மொழி. இருந்தும் தமிழ் மொழி இணைய பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ?
தமிழ் மொழி தமிழகத்தை தாண்டி பிற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ளது.
மேலும் மலேசியா, மியன்மார் , மொரீசியஸ் போன்ற நாடுகளில் கணிசமாக பேசப்படுகிறது கற்பிக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
இவையெல்லாம் தமிழ் மொழியை முன்னுக்கு கொண்டு செல்கிறது .
தமிழகத்தில் இப்போது தான் தமிழ் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. அதனால் வரக்கூடிய நாட்களில் இணையத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.
தொடர்ச்சியாக நாம் எல்லா துறைகளிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்தால் நிச்சயம் உலக நாடுகளும் இந்திய அரசும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்பதிலும் ஐயமில்லை.
இணையம் முழுவதிலும் தமிழை நிரப்புவோம். தமிழ் மொழியை நம் அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கடத்துவோம். வாழ்க தமிழ். வளர்க தமிழர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.