பாஜக பெண் எம்.பி., காவல்துறை அதிகாரிக்கு கடுமையாக மிரட்டல் விடுத்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று உத்தரப்பிரதேச பாஜக பெண் எம்.பி. மிரட்டிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இதைத் தொடர்ந்து பணி நேரத்துக்கு வராத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை, அனுமதியில்லாத மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. கேசர் சிங், வங்கி அதிகாரி ஒருவரை தாக்கிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ராவத், போலீஸ் அதிகாரியை கடுமையாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அவரை அணுகி பேட்டி எடுத்துள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கன்னியக்குறைவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், போலீஸ் அதிகாரி இந்த மாவட்டத்திலேயே இருக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பாஜக பெண் எம்.பி. பிரியங்கா சிங் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே போலீஸ் அதிகாரியை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.