Xianyang பிரமிட்...
சீனாவில் க்ஸியான்ங் ( Xianyang ) எனும் பகுதியிலுள்ள பிரமிடில் வேற்று கிரக வாசிகளின் தளத்தை சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் 2011 முன்பே கண்டு பிடித்துள்ளனர்.
இந்த பிரமிடை வேற்று கிரகவாசிகள் சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்னர் (15000 BC) செயல்தளமாக (Base) பயன்படுத்தியுள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
15000 BC அல்லது அதற்கு முன் எந்தவிதமான மனித நாகரீகமும் உலக வரலாற்று ஆதாரங்களில் இல்லை எனவும் இந்த பிரமிடில் பயன்படுத்த பட்டுள்ள தொழில்நுட்பம் நிச்சயமாக மனிதர்களுடையது இல்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த பிரமிடில் இருந்து மிக நீளமான குழாய்கள் பூமியின் வெகு ஆழத்திற்கு செல்கின்றன.
இந்த குழாய்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் அவை அந்தந்த பகுதியிலுள்ள மண் மற்றும் பாறைகளின் வண்ணத்தையே கொண்டுள்ளன.
மேலும் இந்த குழாய்களில் 8 சதவீதத்துக்கும் மேல் உள்ள உலோகம் இதுவரை கண்டுபிடித்துள்ள எந்த உலோக வகையையும் சேராதது என்பது குறிப்பிட தகுந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.