07/09/2017

நேற்று முன்தினம் பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில், தெலுங்கர்களை மட்டும் கூட்டி வைத்துக்கொண்டு திராவிட கி. வீரமணி ' தெலுங்கர்களாகிய நாம் இப்போது ஒரு முக்கியமான காலக்கட்டத்தை கடக்கிறோம்...


தமிழர்கள் மத்தியில் திராவிடத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து இருக்கிறது.

நமது திராவிடர் கழகம் கூட இதில் தப்பவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது திராவிடர் கழகத்தில் இருந்து எண்ணற்ற தமிழர்கள் வெளியேறி விட்டார்கள் என்பது வெளிப்படை.

இப்போது எல்லாம் நாம் பொதுக்கூட்டம் போட்டால் ஒருவரும் வருவதில்லை.

நமது இயக்கத்தில் தமிழர்கள் பெரிய அளவில் வெளியேறி விட்டார்கள்.

நம்மிடம் அதிகாரப்பூர்வமாக சம்பளம் வாங்கும் மற்றும் கூலி வாங்கும் ஒரு சில தமிழர்கள் தான் நம்மோடு இருக்கிறார்கள். மற்றபடி பெரியார் திடல் பகல் வேளைகளில்  காற்று வாங்குகிறது.

திராவிடர் கொள்கை என்பது வீழ்ந்து விடக்கூடிய கொள்கை தான். வலிய  தமிழன் ஒருவன் எழுந்தால் திராவிடக் கொள்கை வீழ்த்தப்பட்டு விடும் என்று பெரியார் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்.

திராவிடர் கொள்கை என்பது தெலுங்கர்களுக்கான கொள்கை. தமிழர்களுக்கான கொள்கை அல்ல.

தெலுங்கர்களை வாழ்விப்பதற்கான கொள்கை தான் திராவிட கொள்கை. இதை தமிழர்கள் உணர்ந்து அதை எதிர்க்கும் போது அது வீழ்ந்து விடத்தான் செய்யும். அதற்குள் தமிழ்நாட்டில் இருக்கும்  தெலுங்கர்கள் வளம் பெற்று விட வேண்டும் என்பது தான் பெரியாரின் எண்ணம்.

ஐம்பது வருடம் இந்தத் திராவிடக் கொள்கைகள் இங்கே நிலைத்து இருந்ததே  பெரிய விஷயம் தான். அந்த விதத்தில் பெரியார் நமக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறார். திராவிட கொள்கைகளால் நாம் பெரிய அளவில் வசதிகள் பெற்று விட்டோம்.

உயரிய பதவிகள், வேலை வாய்ப்புகள், செல்வாக்கு, வாழக்கை வசதிகள் எல்லாம் பெற்று விட்டோம். இதற்காக தந்தை பெரியாருக்கு நாம் வாழ்நாள் நன்றிக்கடன் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இப்போது நமக்கு இடர் ஏற்பட்டு இருக்கிறது. பெரியார் பெரிய அளவில் விமர்சிக்கப்படுகிறார். அசிங்கப்படுத்தப்படுகிறார். அவற்றில் இருந்து நாம் பெரியாரை காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இனியும் நாம் பெரியாரை முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை. பெரியார் அவர் வரையில் நம் சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து முடித்து விட்டார். இனி அவர் செய்யக்கூடியது ஏதுமில்லை. .

அடுத்தக்கட்டமாக நாம் நமது செயல்முறையை  மாற்றவேண்டிய நிலையை அடைந்து விட்டோம். பெரியாரை விட்டு விட்டு, நாம் கலைஞரை இனி முன்னிலைப்படுத்த வேண்டும். கலைஞர் தான் இனி திராவிட இயக்கத்தின் முன்னோடி. திமுக தான் திராவிட இயக்கத்தின் முதல் கட்சி. இப்படியாக இருக்க வேண்டும் நமது பணிகள். பெரியாரும் திகவும் இனி  மறக்கப்பட வேண்டியவை. மறைக்கப்பட வேண்டியவை.

கலைஞரைக் கொண்டு  தான் இனி திராவிட இயக்கம் செலுத்தப்பட வேண்டும். கலைஞரை நாத்திகராக நாம் காட்ட வேண்டியதில்லை. ஆத்திகராகவே காட்டலாம். நாத்திகம் பெரியாரோடு போகட்டும்.

தமிழர்கள் தங்கள் கடவுள்களைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் மூலங்களை நோக்கிப் போகிறார்கள். ஆகவே நாமும் கடவுள் நம்பிக்கையாளர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

மு.க. ஸ்டாலின் கோவில்களுக்குப் போகிறார். யாகங்கள் செய்கிறார். கலைஞர் தொலைக்காட்சிகளில் பக்தி தொடர்கள் காட்டப்படுகின்றன. கலைஞர்  ராமானுஜர் பற்றி பெருந்தொடர் ஒன்றை எழுதி இருக்கிறார்.

இந்தப் பாதையில் இனி நாம் செல்ல வேண்டும். கலைஞர் இன்று செயல்பட முடியாதவராக  இருக்கிறார். என்றாலும் அவர் தான் இனி   திராவிட இயக்கத்தின் முன்னோடி. பெரியாரை மறந்து விடுங்கள். திராவிடர் கழகத்தில் ஓட்டை விழுந்ததது போல திமுகவிலும் ஓட்டை விழுந்து இருக்கிறது. அங்கிருந்தும் எண்ணற்ற தமிழர்கள் வெளியேறி வருகிறார்கள்.  திமுகவை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இனி திக இல்லை திமுக அதான். பெரியார் இல்லை. கலைஞர் தான்.

கலைஞரை முன்னோடியாக வைத்துக்கொண்டு திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும்.

ஸ்டாலின் ஆட்சிக்கட்டிலில் உட்கார முடியாமல் போனால், உங்கள் மனதிலே இந்த வார்தையைக் கொள்ளுங்கள், திராவிட இயக்கம் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் திமுக தான் நமது இறுதி கதி.

ஸ்டாலின் ஒரு தலைவரா என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். கலைஞரோடு ஒப்பிட்டால் ஸ்டாலின் பூஜ்யம் தான்.

கருணாநிதி இப்போது நலமாக இருந்திருப்பாரேயானால், தற்போதைய தமிழக அரசை கவிழ்த்து விட்டு எப்போதோ ஆட்சியில் அமர்ந்து இருப்பார். ஆனால் ஸ்டாலினால் அது முடியவில்லை. இருந்தாலும்  ஸ்டாலினை விட்டால் நமக்கு வேறு ஆளில்லை. திமுகவை விட்டால் வேறு  கட்சியுமில்லை.

ஆகவே இனி பெரியார் திடல் அல்ல, அறிவாலயம் தான் உங்களுக்கான திடல். அங்கே இருந்து உங்கள் வேலைப்பாடுகளை முன்னெடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார்.

தெலுங்கர்கள் அவரை ஆமோதித்து இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.