07/09/2017

தமிழ் மொழி கொண்டு சமற்கிருதத்தை எதிர்த்திடுவோம்...


முருகன் என்ற சொல்லை சுப்பிரமணிய என ஆரியர்கள் மாற்றினார்கள்.

முருகன் என்றால் தமிழ் நாட்டு மலைகள், தமிழ்ப் பெண் வள்ளி மனக்கண்ணில் தோன்றுவர்.

சுப்பிரமணி என்று சொன்னால் கைலாயம் , இமயமலை ஆகியவை கற்பனையில் தோன்றும்.

தேவயானி என்ற வடநாட்டுப் பெண்ணை சுப்பிரமணியனுக்கு சேர்த்து வைத்தார்கள்.

அப்பெண்ணும் நினைவுக்கு வருவார்.

மயிலாடுதுறை என்ற ஊரின் பெயரை மாயவரம் என மாற்றினார்கள். ஏன்..?

மயிலாடுதுறை எனும் போது  காவிரியும் அதன் செழிப்பில் அங்கு மயில்கள் ஆடிய ஆற்றங்கரையும் நினைவில் வருவதை ஆரியர்கள் விரும்பவில்லை. எனவே மாயவரம் எனப் பெயர் மாற்றினார்கள்.

நம் திருவையாற்றில் உள்ள ஐயாறு அப்பர்  கடவுளை பஞ்சநதீஸ்வரர் என்றார்கள். கோவிலின் நாயகியான அறம் வளர்த்த நாயகியை  தர்மசம்வர்த்தினி என்று மாற்றினார்கள்.

நம் எதிரிகள் சமற்கிருதச் சொற்களை போர்க் கருவியாக பயன்படுத்தி நம்மை வென்றார்கள்.

வில்லேந்தி அல்ல, சொல்லேந்தி வென்றார்கள்..

எனவே சொற்களை, நாம் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.

நம் வெற்றிக்கான உளவியலை நம் மக்களிடையே அது உருவாக்கித் தரும் .

- பெ.மணியரசன், தமிழ்த் தேசிய பேரியக்கம்..

வெறும் சொல் தானே என்று நினைத்து விட வேண்டாம். அதற்கு பின்னே உள்ள அரசியலை புரிந்து கொள்வோம்.

தமிழர் கோவிலுக்குள் சமற்கிருதம் நுழைந்தது , அது தமிழ் மொழியை மட்டும் வெளியேற்றவில்லை, தமிழர்களையும் வெளியேற்றியது.

தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகமுடியாத நிலை இன்றும் உள்ளது.

தமிழ் மொழி கொண்டு சமற்கிருதத்தை எதிர்த்திடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.