காலத்தால் அழிக்க முடியாத இறை காவியம் ஒன்று இப்பூமியில் விரைவில் அரங்கேற்றப்பட உள்ளது, இதனை தீர்க்க தரிசிகளின் தீர்க்க தரிசனங்கள் கடந்த 1000 வருடங்களாக இப்புவியில் தனது வெளிப்பாட்டினை வசனங்களாக வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சத்திய யுகத்தின் தீர்க்க தரிசனங்களும் பல்வேறு காலக் கட்டங்களில் இறைவன், மனிதர்கள் வாயிலாக இப்புவியில் நடக்கும் பல மாற்றங்கள், சம்பவங்கள், அரசியல் பிண்ணணிகள், புவியின் மாற்றங்கள், அழிவுச் சம்பவங்கள், இயற்கையின் மாற்றங்கள், வானிலை மாற்றங்கள், இறை அதிசயங்கள் போன்றவற்றை தீர்க்கதரிசனங்களாக வெளிப்படுத்தி வருகிறார்.
பொதுவாக மனிதர்கள் தன்னை சுற்றி நடக்கும் பல சம்பவங்கள் சூழ்நிலைக் காரணங்களை மட்டுமே உண்மை என நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை அன்று. அது அனைத்துமே இறைவன் மனிதகுலத்திற்கு தரும் ஒரு எச்சரிக்கை செய்தியே ஆகும். இதுவே இன்று சத்திய யுகத்தில் மனிதகுலம் அறிய வேண்டிய தீர்க்கதரிசனங்கள் ஆகும்.
இன்று சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 15-ம் தீர்க்க தரிசனம் ஆகும். இந்த 15-ம் தீர்க்க தரிசனம் பல குறிப்புகளை உள்ளடக்கிய இறை தீர்க்கதரிசனங்கள் ஆகும். இந்த 15-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் முதலாவதாக தெரிந்து கொள்ளும் தீர்க்க தரிசனம் எதுவென்றால் “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 13, 14, 15-ம் தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள பல்வேறு குறிப்புகள் நடைபெறும் காலக் கட்டமாக இக்காலக் கட்டம் இருக்கும் என 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
மன்னார் வளைகுடா புயல் தமிழகத்திற்கு பலத்த சேதங்களை உருவாக்கும் என்றும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் ஒருவனின் திருநாமம் உலகம் முழுவதும் அதிசயமாகப் பேசப்படும் காலம் இக்காலம் என்றும், அவனின் இருப்பிடமே இறைவன் இடம் பெறும் திருச்சபை என்றும், அதன் விபரங்களை தற்போது உலக மக்கள் மிகுந்த ஆவலுடன் தேடி வருகின்றனர் என்று 15-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை மெய்பட கூறுகிறது.
மக்களின் மனக்குறையை அறிந்து அதனை தீர்க்கும் மன்னவர் எவரும் இப்புவியில் இல்லையென்றும், இனிமேல் ஒருவன் வருவான் என்றால் அது சத்திய யுகத்தின் பிரஜாதிபதியாகவே இருப்பான் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே எடுத்துக் கூறுகிறது.
சுண்ணாம்பு மலை ஒன்று பொது மக்களால் தற்போது அடையாளம் காணப்படும் என்றும், அந்த மலையில் தென்படும் குகையில், மனிதகுலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்த சான்றுகள் தற்போது கண்டறியப்படும் என்றும், 7 உலகத்தில் மனிதகுலம் வாழ்ந்ததற்க்கான சான்றுகள் அந்த குகையில் கண்டறியப்படும் என்றும் 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. “மெக்சிகோ“ கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலம் இக்காலம் என்றும், “சத்திய யுகம்“ எனும் நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு குறிப்புகளும் இனி காலதாமதமின்றி நடக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
கடலூர், வேதாரண்யம், விசாகப்பட்டினம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி, கேரளா, பாம்பே கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகள் என 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கையை மீண்டும் பதிவு செய்கிறது.
மழைக்காலம் தற்போது இது என்றாலும் “பேய்மழை“ என்று அழைக்கப்படுகின்ற மழைக்காலமாக இக்காலம் இருக்கும் என்றும், தமிழகத்திற்கு இந்த மழைக்காலம் மிக, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
ஊட்டி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அதிகமான நிலச்சரிவு நடக்கும் பகுதியாக இது இருக்கும் என்றும், அங்கு வாழும் மக்கள் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு இதுவென்று 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே தெரிவிக்கின்றது.
தெய்வீக சங்கல்பம் ஒன்று சமயபுரத்தில் நடைபெற உள்ளது என்றும், அத்திருத்தலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இனி ஊர்கள் தோறும், வீடுகள் தோறும் “வேப்பிலை“ தோரணங்கள் தொங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
குற்றாலம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு நடக்கும் சில சம்பவங்கள் மக்களுக்கு பீதியை ஏற்படுத்த உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியை இங்கே பதிவு செய்கிறது.
வடமாநில கும்பல் ஒன்று சென்னையில் பல திடுக்கிடும் சம்பவங்களை நிகழ்த்தும் என்றும், இதனால் மக்கள் பீதியும், குழப்பமும் அடைவார்கள் என்றும், காவல்துறை விரைந்து செயல்பட்டு அக்கும்பலை பிடிக்கும் என்றும், அவர்களின் பிண்னணியில் உள்ள செய்திகள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டு பெரும் சேதங்கள் தவிர்க்கப்படும் என்று 15-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மன்னார் வளைகுடா புயல் பற்றி செய்திகளை அரசு மக்களிடையே சரியாக கொண்டு போய் சேர்க்காது என்றும், இதனால் பல விளைவுகள் தமிழகம் சந்திக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை இங்கே பதிவு செய்கிறது.
பாகிஸ்தானின் அத்துமீறல் செயலால் காஷ்மீரில் மீண்டும் ஒரு “கலவரம்“ வெடிக்க உள்ளதாகவும், இதனால் ஆளும் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்றும், அதன் எதிரொலியே காஷ்மீரில் திடீரென்று ஒரு “புரட்சி“ வெடிக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மீண்டும் காஷ்மீர் கலவரத்தை பற்றி ஒரு செய்தியை இங்கே பதிவு செய்கிறது.
முருகன் சந்நதியில் அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், அது நடைபெறும் நாள் அன்று தமிழகத்தில் உள்ள ஒருவன் அதனை நான்தான் நிகழ்த்தியதாகவும், தான் “முருகப்பெருமானின் அவதாரம்“ என்று பகீரங்கமாக அறிக்கை விடுவான் என்றும், அவனின் அறிக்கைக்கு பின்பு அவன் இருக்கும் அந்த “குடிலில்“ திடீரென்று பல “அசம்பாவிதங்கள்“ நடைபெறும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இறைவனின் அவதாரங்கள் மனித வடிவில் என்ற கூற்றை இவனைப் போன்றவர்கள் தமிழகத்தில் பலர் பொய்யான பிரச்சாரங்களை இனி மக்கள் மத்தியில் வெளியிடுவார்கள் என்றும், அவர்கள் மீது இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் இனி நேரடியாக இறங்கிட உள்ளதாக 15-ம் தீர்க்க தரிசனங்கள் இங்கே மெய்பட கூறுகின்றன. அனைத்து மதத்திலும் உள்ள போலியான மனிதர்களை இனி மக்கள் அடையாளம் காணும் காலமாக இக்காலக் கட்டம் அமைய உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
திருச்செந்தூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், கடல் சார்ந்த சம்பவம் ஒன்று அங்கு உடனே நடக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு தெரியப்படுத்துகிறது.
இறைவனின் இறுதிசபையை பற்றி மக்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள் என்றும், இறைவனின் “முத்திரை“ பதிந்த அந்த திருச்சபை தமிழகத்தில் தற்போது இயங்கி வருகிறது என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
ஆதிசக்தி யின் அவதாரக் கொள்கையே சத்திய யுகம் ஆகும். அந்த சத்திய யுகத்தின் போர்க் காலக் கொள்கையின்படி இப்பூமியின் மீது தற்போது நீயாயத் தீர்ப்புகள் இறங்கிட உள்ளது என்றும், அதில் முக்கியமாக தமிழகத்தில் தற்போது அது நிகழும் காலமாக உள்ளது என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்திய அரசியல் அமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என மக்கள் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதனால் பல அரசியல் சாசனங்கள் மாற்றி வரையறுக்கப்பட உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
உளவியல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு ஒரு யோகா அமைப்பு தனது “ஹீலிங் முறையில்“ சிகிச்சை அளிக்கும் என்றும், இது உலக மக்களிடையே அமோக வரவேற்பை பெற உள்ளதாகவும், இது உடனே நடக்க உள்ள ஒரு நிகழ்வு என்றும், இதன் பின்னரே “மருந்து“ என்ற ஒன்றை தவிர மாற்றுவடிவம் என்று இவ்வுலகில் பல அதிசயங்கள் உண்டு என்பதே மக்கள் சமுதாயம் நம்பத் துவங்குவார்கள் என்று 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை மெய்பட இங்கே எடுத்துக் கூறுகிறது.
உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற 8-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ள பல குறிப்புகள் நடக்கும் காலமாக இக்காலம் உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் இங்கே தெரிவிக்கின்றது.
ஆன்மீகம் சார்ந்த ஒருவரின் இறப்பு, அதனை தொடர்ந்து சினிமா பிரபலங்களில் ஒருவரின் இறப்பு, அரசியல் பிரமுகர் ஒருவரின் இறப்பு என பல நிகழ்வுகள் நடக்கும் காலக்கட்டம் இதுவாகும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
கர்நாடகாவில் மீண்டும் அரசியல் சார்ந்த குழப்பங்கள் அங்கு உருவாகும் என்றும், இதனால் அங்கு பல கலவரங்கள் ஏற்பட உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
வானத்தில் இனி பல அதிசயங்களை மக்கள் காண்பார்கள் என்றும், அது இறைவனின் வருகைக்கான “சமிக்கைகள்“ என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இறைவனின் வருகையை எதிர்நோக்கி நாம் விழிப்புடன் காத்திருப்போமாக.
குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.
மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.