01/06/2018

இன்னொரு ராமானுஐம்.. நியூட்டன் அழைப்பு விடுத்த தமிழன்...


சிவசங்கர நாராயணப் பிள்ளை என்பது தான் அவர் பெயர்.

1901 ஏப்ரல் 5 இல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார்.

எஸ்.எஸ். பிள்ளை சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து 4ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார்.

பேராசிரியர் அனந்தராவ் என்பவர் கீழ், பிள்ளை ஆராய்ச்சி செய்தாராம். பிறகு 1929 இல் அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார்.

அப்போதுதான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

இதில் சிறப்பம்சம் என்ன என்றால், இந்தியாவிலேயே முதல் முதலாகக் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ். பிள்ளைக்கு உண்டு.

ஒருமுறை அமெரிக்கக் கணிதமேதை டாக்டர் டிக்ஸன், இவரைக் காண கல்கத்தா பல் கலைக்கு வந்தபோது, அவர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில்
நண்பர்களுக்கு மேலைநாட்டு பாணியில் விருந்தளித்தார்.

1936 பிப் 10 இல் எஸ்.எஸ்.பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து "டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' - ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது.

வாரிங்க்ஸ் ப்ராப்ளத்திற்கு விடைகண்ட கையோடு சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த "ஃபூரியர் சீரிஸ்' என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார்.

இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர்.

சான்பிரான்ஸிஸ்கோவில்
நடைபெறவிருந்த உலகக்கணித மாநாட்டுக்குத் தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 1950ஆகஸ்டில் அமெரிக்கா புறப்பட்டார்.

30.8.1950 இல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவின் புகழையும் தன்னுடைய எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளோடு பறந்தார்.

கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது.

சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்கு கொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர்.

உலகின் தலைசிறந்த கணித மேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ''மென் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்" நூலில் இந்தியாவின் சார்பில் இராமானுஜனும் சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும்
தமிழர்களே என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.