தமிழக அரசை ஆட்டம் காண்பிக்க வைக்க ட்ராஃபிக் ராமசாமியைபோல் தொடர் நூதனப் போராட்டத்தை கையில் எடுத்த இளைஞர்கள்.... (சபாஷ்)
இன்று (30.06.2018) காலையிலிருந்து "பணிக்கோ" அல்லது 'கல்லூரிக்கோ' பள்ளிக்கோ செல்லும் நபர்கள் தங்களது சட்டையில் சிறிய கருப்புப் பட்டையை அணிந்துசெல்லுமாறு தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலமாக கோரிக்கை வைத்துவருவது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது...
ஆம்... ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட 30 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்வோம்.. இன்று நாம் ஆரம்பிப்போம் நாளை நம்மை பார்த்து அனைவரும் ஆரம்பிப்பார்கள்.. கையில் சிறிதளவு பணம் வைத்திருப்பவர்கள் கருப்புப் பட்டையை வாங்கி அனைவருக்கும் விணியோகம் செய்யுங்கள்... என்றவாறு தொடங்கும் புரட்சிகரமான ஆடியோவின் இறுதியில் 30-வது நாள் மாவட்ட அளவில் ஒரு நூதன போராட்டமாக இது முடியும் என்றும் அப்போராட்டத்தை பற்றிய விபரம் மிகவும் ரகசியம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.... நம்மால் ஏதாவது செய்ய முடியாதா என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது இந்த ஆடியோ...
ஜப்பானில் இருக்கும் அம்மக்கள் அரசுகளை எதிர்க்க பயன்படுத்தும் இம்முறையை தற்போது இளைஞர்கள் கையில் எடுத்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது... இம்மாபெரும் நூதன போராட்டத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் BLACK BADGE PROTEST...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.