வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசெஜ். அதில் ஒலித்தது குணாளனின் குரல். பிறந்தவுடன் மூச்சுவிட தவித்தபடி மருத்துவ உதவிக்காக திருச்சியிலிருந்து 30 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னைக்கு வந்த பச்சிளம் குழந்தையின் அப்பாதான் இந்த குணாளன். 'தம்பி காலையில ஒன்பதரை மணிக்கு தவறிட்டான் மேடம்' என்ற கண்ணீர்க் குரலைக் கேட்டதும், உடனே அவருக்கு போன் செய்தேன்.
ஒரு வாரம் முன்னாடிகூட பிள்ளைகிட்ட நல்ல முன்னேற்றம் தெரிஞ்சதுங்க. அபாய கட்டத்தைத் தாண்டலைன்னாலும் குழந்தைகிட்ட சின்னச் சின்ன அசைவுகள் இருந்துச்சு. டாக்டர்களும் தொடர்ந்து சிகிச்சை கொடுத்துட்டே இருந்தாங்க. அந்த நம்பிக்கையில்தான் என் பிள்ளைக்கு 'சாய்ராம் குரு'ன்னு பேர் வைக்கலாம்னு நானும் என் மனைவியும் முடிவு செஞ்சோம். இப்படி, எங்களை ஏமாத்திட்டுப் போயிடுவான்னு நினைச்சேப் பார்க்கலைங்க என்றவரின் வார்த்தைகள் கேவலுடன் முடிகிறது.
நான் அழுதா என் மனைவி தாங்க மாட்டாள்னு வெளியே வந்து அழுதுகிட்டு இருக்கேங்க. எங்க சாய் மறுபடியும் எங்க வீட்டில் வந்து பிறப்பாங்க. அந்த நம்பிக்கையில்தான் இப்ப அவனை அனுப்பி வைக்கிறோம் என்ற குணாளன் வெடித்து அழ ஆரம்பித்தார்.
மீண்டும் வருவான் சகோதரா... தைரியமாக இருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.