24/11/2018

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

வீரமணி கூறுகிறார்:

கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.. (விடுதலை 20-7-1997).

இதில் வரும் ‘பேய்‘ என்பது என்ன?

ஆத்திகர்கள் தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள்..

ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?

பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!

அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்..

வீரமணியின் பதில் என்ன?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.