24/11/2018

அமெரிக்காவின் சூழ்ச்சி கோங்கோ மக்கள் மீது...


லிபியா அதிபர் கடாபியாக இருக்கட்டும். ஈராக் அதிபர் சதாம் ஹுஸேனாக இருக்கட்டும் இது இரண்டுமே வேறொரு நாடு.

இங்கு உள்ளே புகுந்து அந்த அதிபரை கொலை செய்ய அமெரிக்காவால் எப்படி முடிந்தது ?

இதற்கு காரணம் அங்குள்ள செல்வங்கள் என்பது முட்டாளுக்கு கூட தெரியும் ...

அப்படி இருக்கும் தருவாயில் அருகே உள்ள நாடுகள் அமெரிக்காவை ஏன் எச்சரிக்கவில்லை தெரியுமா ?

அமெரிக்காவிடம் ஒரு பழக்கம் உண்டு தாம் குறி வைத்துள்ள செல்வ செழிப்பான நாட்டை அருகே உள்ள பெரிய நாட்டுடன் சண்டையை மூட்டி பிரித்து.. ஏறக்குறைய விடுதலை பெற்று அவர்களை சுதந்திரமாக சில காலம் இருக்க விட்டு திடீரென்று பாய்வது..

ஏறக்குறைய நன்றாக தீவனம் போட்டு வளர்த்து ஒரு நாள் அறுத்து சாப்பிடுவது போன்று..

இதை இப்பொழுது தான் அமெரிக்க செய்து கொண்டுள்ளது என்று நினைக்க வேண்டாம்..


1960 பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ மக்கள் அம்மக்களில் சிறப்பான ஒரு தலைவரை தமது சுதந்திர நாட்டின் ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்கள் அவரின் பெயர் லுலும்பா.

போராட்டம் மக்களின் விடுதலைக்காக போராடிய இவரை ஆட்சியில் வைத்ததால் காங்கோ மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.

திடீரென்று புரட்சியை உருவாக்கி நாங்கள் காங்கோ மக்களை காப்பாற்ற போகிறோம் என்று குதித்த அமெரிக்க அதற்க்கு தமது அன்பான பேச்சு திறமையால் முட்டுக்கட்டையாக இருந்த  காங்கோ ஜனாதிபதி லுலும்பா வை விஷம் கொடுத்து கொலை செய்ய சொன்னார்கள்..

செய்ய சொன்னது யார் தெரியுமா ?

1961 அமெரிக்க அதிபரான டிவைட் ஈசன் ஹோவேர் என்பவன்...

அதாவது ஜான் f கென்னடிக்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர் தான் இவர்..

[முதல் படம்]

லுலும்பா கொங்கோ நாட்டு ஆட்சித் தலைவராக..

[இரண்டாவது படம்]

அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு கொலை செய்வதற்கு முன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.