சிரிப்பு என்பது யாராலும் சீக்கிரம் அதை செய்து பிறரை மகிழ்விப்பது கடினம்.
சிலரின் வாய் ஜாலத்தாலும் நடிப்பினாலும் சிரிக்க வைக்கலாம்.
பேசாமல் இருந்து மற்றவரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க ஒருவரால் தான் முடியும்..
அவர் வேறு யாரும் இல்லை பகைவரையும் தம் மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் தான்..
தம்முடைய நடை முகபாவனை சுறுசுறுப்பு போன்றவற்றைக் கொண்டு பிறரை மகிழ்வித்தவர் சாப்ளின்.
அவர் தம் சிறு வயதிலிருந்தே அனைவரையும் சிரிக்க வைத்தவர்.
அந்தப் பெரும் கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் செப்டம்பர் 19.
அமெரிக்கா தடை செய்தது ஏன்?
தம் விளம்பர படம் ‘லைம்லைட்’ ற்க்காக ப்ரிட்டன் சென்று திரும்பிய அவரை அமெரிக்கா விசாரணையின்றி நுழையவிடாமல் தடுத்தது.
40 ஆண்டுகாலமாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் இருந்ததே அதன் காரணம்.
மேலும் தம் படத்தினால் கம்யூனிஸத்தை பரப்ப முயன்றாரும் கூறப்பட்டது.
ஆனால் அவரின் ரசிகர்கள் அதை மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றிற்க்கே குரல் கொடுத்தார் என்றனர்.
தி கிரேட் டிக்டேட்டர் என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார்.
அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டது.
அதன் பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின்.
அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம்.
தன் நாட்டுக் குடிமகன் இல்லை என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.
தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர.
ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர்.
அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.