புயலால் பாதிக்கப்பட்டு விழுந்துவிட்ட தென்னையில் இருந்து Coco peat எனப்படும் தேங்காய் நார்கழிவுகளை எடுத்து நிலத்தில் போட்டு.. அதில் காய்கறிகளை பயிரிட வேண்டும்....
சீனா தேசத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் Coco peat தில் தான் விவசாயம் செய்கிறார்கள்... வெளிநாட்டு விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாம்... இப்போது சாய்ந்துள்ள மரங்களின் மூலம் Coco peat எடுத்து ஏன் அதே நிலத்தில் காய்கறி விவசாயத்தில் இறங்கக்கூடாது.... இதன் மூலம் 90% நீர் தேவையை குறைக்க முடியும்.....
தென்னை கன்றுகளை மீண்டும் நட்டு வளர 4 வருடங்களாவது ஆகும்..... அந்த விவசாயிகள் உடனே மீண்டுவர.... காய்கறிகள் தான் சரியான தீர்வாக அமையும்..... காய்கறிகள் ஒரு மாதத்திற்குள் வளர்ந்துவிடும்.....
அடுத்த மாதத்தில் இருந்து விவசாயிகள் கையில் பணம் ஓரளவேனும் புரள ஆரம்பித்துவிடும்......
இந்த நேரத்தில் நம் விவசாயிகளுக்கு நாம் பொருள்களை கொடுக்கும் போதே.... சேர்ந்து காய்கறி விதைகளையும் சேர்த்து கொடுத்தால்....
அவர்கள் உடனே மீண்டு வர நாம் செய்த உதவியாக இருக்கும்.......
புயல் பாதித்த பகுதிகள் அனைத்தும்.... காய்கறி விதைக்க ஏற்ற சூழல் உள்ள பகுதிகள் தான் என வேளாண்துறையில் பணி செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார்.....
எனவே.... அந்த விவசாயிகளுக்கு காய்கறி விதைகளை நிவாரணமாக கொடுத்து உதவுங்கள்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.