பள்ளிக்கூடங்கள் அருகே இருக்கும் பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள். முதல்வரின் வாகனம் கோட்டைக்குச் செல்லும் பாதையில் கஞ்சா விற்பனை. இளசுகளின் இரவு நேர கேளிக்கைகளுக்காகவே இறக்குமதி செய்யப்படும் புதிய போதை. அனைத்தையும் கண்டும் காணாமல் விடுவது காவல்துறையின் 'மாமூலான' வழக்கம். குட்கா வரை லஞ்சம் பார்ப்பது ஆள்வோரின் பழக்கம்.
இவற்றைத் துணிந்து அம்பலப்படுத்தும் திறன் ஒரு சில ஊடகத்தினருக்கே உண்டு. அந்தத் துணிவுக்கு விலையாக, தன் உயிரையே இழந்திருக்கிறார் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ்.
குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி செய்தி வெளியிட்ட அவரை, இரவு நேரத்தில் வீட்டிலிருந்து தந்திரமாக வெளியே வரவைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறது ஒரு கொடூரக் கும்பல்.
மோசஸ், அர்னாப் அல்ல. மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவிப்பதற்கு. அவர், நம்மில் ஒருவர். நீதி கிடைக்கவும் ஊடகத்தினரின் உரிமை காக்கவும் உறுதியுடன் நிற்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.