10/11/2020

வானம் பாடி பறவைகள்...

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர் இலை சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை அமைக்கும் வானம்பாடி. ஆமாம், இது பாடுவது எப்போது ?

சாதாரணமாக மாசிமாதம் (பிப்ரவரி) முதல் ஆடிமாதம் (ஜுலை) வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.

பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும். அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிடங்களுக்குக் கூட நிகழும்.

பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே பல மீட்டர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.

இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும். இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின், தாய் தந்தை ஆகிய இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவளிப்பதில் பங்கேற்கும்.

நம் நாட்டில் கணப்படும் வானம்பாடிகளில், மூன்று முக்கிய வகைகள் உண்டு. அவை கொண்டைகொண்ட வானம்பாடி (Crested lark), ஆகாசத்து வானம்பாடி (Skylark),சாம்பல் தலை வானம் பாடி (Ashy crowned finch lark) என்பவையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.