10/11/2020

மூதேவி...

யாரையாவது வசைபாட மூதேவி என்ற சொல் அதிகமாக பயன்படும். என் பாட்டி மாலையில் விளக்கு போடு, இல்லையென்றால் மூதேவி வந்துவிடுவாள் என்பார்கள்.

அழுக்காக , நாற்றம் வீசுகிற , சோம்பலாக இருப்பவர்களிடம் மூதேவி வந்துவிடுவாள் என்னும் சொல்லாடல் உள்ளது. இது ஒரு வரலாற்று திரிபாகும்.

மூத்ததேவி என்ற சொற்பதம் மருவி மூதேவியாயிற்று. மூத்ததேவி தமிழ் பெண் தெய்வம். சங்க காலத்திலிருந்த ஒரு பெண் தெய்வம்.

இலையும்,தழையும் , சாணமும், சேறுமான மண்சார்ந்த அழுக்கினை உரமாக மாற்றும் மூலவளத்தின் தெய்வம் மூத்த தேவியாகும்.

8ம் நூற்றாண்டின் பல்லவர்களின் தாய் தெய்வம். நந்திவர்ம பல்லவனுக்கு குலதெய்வம். வைதீக மரபை ஏற்காத குடவரை கோவில்களில் மூத்த தேவிக்கு சிலை உள்ளது. மூத்த தேவி ஜோஷ்டா தேவி ( வட மொழியில் மூத்தவள் ) என்றும் அழைக்கப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களில் இவள் மாமுகடி,தவ்வை, காக்கை கொடியோள், பழையோள்,சேட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

வைதீக மதம் விரிவடையும்போது அதை ஏற்றுக்கொள்ளாத யாவும் அதனுள் கரைக்கப்பட்டு அதற்கு வேறு சாயம் பூசப்பட்டது (இழிவாக மாற்றப்பட்டது )  வரலாற்று உண்மை.

உதாரணமாக " சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே" என்று மூத்ததேவி வறுமையின் சின்னம் என தொண்டரடிப் பொடி ஆழ்வார் நகை யாடுகின்றாள். குழந்தை வரம் தரும் தெய்வமாகவும், வண்ணார் தெய்வமாகவும் மூத்த தேவி இருந்தாள். 

மூத்த தேவி கோவில்கள் ( வரலாற்று தொல்லெட்சம் )...

1. திருப்பரங்குன்றத்தில்  குடவரை கோவில்.

2. கங்கை கொண்டானுக்கு அருகில் ஆண்டிச்சிப்பாறை குடவரை கோயில்.

3. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

4. புதுகோட்டை மாவட்டம் காளியபட்டி சிவன் கோயில்.

5. திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்.

6. திரு கொண்டீஷ்வரம் பசுபதீஸ்வரர்  கோயில்.

7. திருச்சி திருவனைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில்.

8. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்.

இது போன்று பல  தெய்வங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதில் மூத்த தேவியும் ஒன்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.