குண்டலினி சக்தி பயணம் - பாகம் நான்கு...
சுவாச ஒழுங்கின் மூலம் பெறப்படும் அதிகப்பட்ட ஆற்றலை தேகத்தில் முறையற்ற முறையில் அங்கும் இங்கும் ஓடி விரையம் ஆகாமல் மூளையின் முக்கிய ஆதாரங்களில் அந்த ஆற்றலை பயன்படுத்தவதின் மூலம் அந்த ஆதாரங்களினால் ஏற்படும் அளவற்ற பயன்களை பெறலாம்..
அளவற்ற ஆற்றலை உணர்வின் மூலம் மட்டுமே அந்த ஆதாரங்களை பயன் படுத்த முடியும்..
வெறும் மன கற்பனையில் அந்த ஆதாரங்களை நினைத்துக் கொண்டு பயிலுவதால் எந்த பலனும் இல்லை.. வாழ்நாள் விரையமே ஆகும்..
அப்படி தான் எந்த பலனும் இன்றி பல பயிற்சிகளை மன கற்பனையில் செய்து செய்து பல வருடங்கள் ஆகியும் முடிவில் எந்த பலனும் இல்லாமல் போகின்றது பல பேர்களின் அனுபவம்... மிஞ்சியது வருடங்களின் எண்ணிக்கை மட்டுமே..
நாம் முறையான சுவாச ஒழுங்கில் பெறப்படும் அதிக ஆற்றலால் மட்டுமே எதுவும் செயல் கூடும்..
ஆற்றலை திருடும் மனதின் கற்பனை திறனால் எதுவும் நடப்பதில்லை.. இது மிக வெட்ட வெளிச்சமான உண்மை...
ஆற்றல் ஒன்றே வேறு ஒன்றை செயல் பட வைக்கும்...
அப்படியான ஆற்றலால் தான் நாம் இப்போது பிடரி என்னும் நினைவக ஆதாரமான தலையின் பின்பக்கம் கொண்டு செல்லுகிறோம்..
அது தண்டுவடத்தின் முடிவிலே முகுளமாக இருக்கிறது..
இந்த முகுளத்தின் சிறப்பு எல்லோரும் அறிந்ததே.. முகுளத்திற்கு பின் தலையில் விழும் அடியால் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் நினைவு தப்பி விடும் என்பது அறிந்ததே..
பிடறி அம்மன் குடி இருக்கும் இடம் என்பர் யோகியர்..
குண்டலினி சக்தி அந்த இடத்தை அடையாத நிலை வரை அது பிடறி அம்மன்.. அடைந்த பின் அது பிடாறி அம்மன் ஆக மாறி விடும்..
பிடாறி அம்மனாக மாறிய பின்பே குண்டலினி சக்தி தலையின் நடு பகுதியில் ஊர்ந்து நெற்றியில் இறங்கி புருவ மத்தி என்று சொல்லப் படும் சுழுமுனையில் மையம் கொண்டு பல அளவற்ற அனுபவங்களை தரும்...
பிடறி என்றால் ப்+ இடறி என பிரிந்து பகர மெய் ஆன ஜீவனை இடறி அதாவது தடுமாற செய்வது என பொருள் கொள்ளும்...
பிடாறி என்பது ஜீவனை தடுமாறாமல் வைத்துக்கொள்ளுவது என பொருள் கொள்ளும்..
இடாறி என்பது இடறி விழாத நிலை ஆகும்..
அதாவது பிறவி குணங்களான காமம் கோபம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் வெகுளி ஏக்கம் போன்ற பிறவி குணங்களின் எண்ண ஆதிக்கங்களால் இடறி இடறி விழும் போக்கு மாறி, அந்த எண்ண ஆதிக்கங்கள் முற்றிலும் நீங்கி, இடறி விழாத திட நிலை என்பதாகும்...
பிடறி ஆதாரத்தை குண்டலினி சக்தி அடைந்து அதை பக்குவப்படுத்தாத வரை, பிடறி அம்மன் பிடாறி அம்மன் ஆகாத வரை, எந்த நீதி சாஸ்திர சமய மத நூல்கள் துளியும் பலன் அளிக்காது...
அம்மன் என்றவுடன் பெண் தெய்வம் நினைவுக்கு வரலாம்.. ஆனால் யோகநிலை விளக்கம் என்னவென்றால், அம் என்பது பிரபஞ்சம் எனவும் மன் என்பது மனம் எனவும் பொருள் கொள்ளும்...
அம்மன் என்பது குறுகிய நிலையில் முடங்கி கிடக்காமல் பிரபஞ்ச முற்றும் விரிந்த விசாலமான மனம் என்பதாகும்...
மனம் அந்த நிலைக்கு வர பிரபஞ்ச ஆற்றல் வடிவமான் குண்டலினி சக்தியால் மட்டுமே முடியும்..
அதாவது விசாலமான மனம் ஆக்குவதற்கு மனதை தவிர்த்து வேறு ஒரு பலம் வாய்ந்த சக்தியான, ஆற்றலான, குண்டலினி சக்தியால் மட்டுமே முடியும்...
மனதை திருத்த மன கற்பனைகளால் வடிவமைக்கப் பட்ட யோகப் பயிற்சிகள் உதவவே உதவாது... இதனை நம் விஞ்ஞான அறிவால் உணர்ந்து கொள்வோமாக..
அப்படி பிடறி ஆதாரத்தில் பிடாறி அம்மன் ஆன மனமே மேலும் விரிந்து தலையின் நடுபகுதியில் ஞான பீடமாகிய உச்சந்தலையை தொட்டுக் கொண்டு ஞான அடைய முடியாத நிலையில் மேலும் நகர்ந்து மேலும் பக்குவம் அடைய புருவ மத்திக்கு வந்து அடைகிறது..
அப்படி ஞான பீடத்தை கடந்தும் ஞான முடியாத நிலையை பின்பு பார்க்கலாம்...
பிடறி ஆதாரத்திலிருந்து புருவமத்திக்கு வரும் குண்டலினி பயணம் இரண்டாவது பயணம்..
இந்த குண்டலினி புருவமத்தியில் என்ன என்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது என்ற சுவரசியமான தகவல்களை இனி வரும் பகுதியில் பார்க்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.