மராத்திய மாநிலத்தில் ஓடும் தொடர்வண்டிகளில் தொடர்ந்து மராத்தி மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தொடர்வண்டித் துறையில் இந்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மராத்தி மொழிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று (Marathi Ekikaran Samiti's) மராத்தி ஒன்றிணைக்கும் குழுவினர் இன்று மும்பையில் போராட்டம் நடத்தி கைதாகி உள்ளனர். இவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர் காவல்துறை.
மராத்தி காவல்துறை இவர்களது போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவும் தெரிவித்தார்களாம்.
உண்மையில் இப்படியான போராட்டம் தமிழகத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் கூட நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் இந்தி மையம் கொண்டுள்ள மும்பையில் நடந்துள்ளது இந்தியின் ஆணி வேரை அசைக்கும் என்பதில் ஐயமில்லை.
இனி இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது என்று தேசபக்தர்கள் யாரும் புலம்ப வேண்டாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.