29/04/2017

சித்தராவது எப்படி - 42...


இந்த நொடியின் நடப்பில் பிடிப்பு...

கடவுள் வரவுக்காக ஏங்கி தவிக்கும் மனித குலம் இந்த நொடியிலும் தன் கருணையை வாரி வழங்கி கொண்டு இருப்பதை உணராத நிலையே அஞ்ஞான நிலையாகிய மதி அற்ற நிலை..

எல்லா மதங்களும் கடவுள் வரவுக்காக தங்களை ஏன் தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் ஒரு மிக பெரிய சதி திட்டம் மிக மிக நுணுக்கமாக மிக மிக இரகசியமாக யாரும் அறியாத வண்ணம் பிண்ணி பிணையப் பட்டு உள்ளது..

இந்த நிகழ் கால நிஜம், இந்த உயிரோட்டமான உண்மை, வெளிப்பட்டால் அத்தனை சர்சுகளும் மசூதிகளும் கோவில்களும் மடாலயங்களும் கேட்பாரற்று அநாதைகளாய் போய் புராதன நினைவு சின்னங்களாய், மாறி போவதை யார்தான் பொறுத்துக் கொள்வார்கள் ? யார் தான் ஒத்துக் கொள்வார்கள் ?

அவைகளை காப்பாற்ற, பொய்யை ஏற்றுக் கொண்டு, பொய்யை பரப்பி தான் மடிந்தாலும் இந்த உலக மக்கள் அனைவரும் மடிந்தாலும் பரவாயில்லை என்ற சமயத்துறவிகள், சமய தியாகிகள் சமய இலட்சியங்கள் கொண்டோர் வழி முறைகளே, முன்னிலை படுத்தப் பட்டு கொள்கைகளாக, இன்று உலகம் முழுமைக்கும் நடமாடிக் கொண்டு இருக்கின்றன..

அககுருவின் சமாதி என்றோ கட்டப்பட்டு விட்டது.. ஆனால் மிக சத்தியமான உண்மை என்னவென்றால் இந்த அககுருவின் சமாதி தான் உண்மையான ஜீவ சமாதி.. ஏனைய சமாதிகள் எல்லாம் பாவ சமாதிகள்..

திகைப்பூட்டும் இந்த உண்மை புரிந்து கொள்ள வேண்டும்..

ஆத்திரமோ கோபமோ கொள்ளாமல் அந்த உண்மையான ஜீவ சமாதியில் உயிரோட்டமாக இருக்கும் அக குருவை வேண்டிக் கொண்டால், உண்மை தானாக வெளிப்படும்...

மற்ற ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் ஒவ்வொரு உயிரின் உள்ளும் இருக்கின்ற அந்த ஜீவ சமாதியின் அதிர்வலைகளால் தான் அதை தாங்கிய உடல் உயிர் வாழுகிறது என்பது தான்..

மனிதன் உலகின் கபட, அஞ்ஞான தந்திர வழிகளில் சிக்கி, தன்னில் இருக்கும் ஜீவ சமாதியை, பாவ சமாதி ஆக்கும் வரை, ஆக்கப் படும் வரை, அந்த அககுருவின் அதிர்வலைகள் மனிதனை காத்துக் கொண்டு இருக்கிறது..

உலகின் பிரமாண்டமான பொய்களின் வெளிபாடாய் விளங்கும் பிரமாண்டமான மசூதிகளும் சர்சுகளும் கோவில்களும் ஏற்படுத்தும் பிரமாண்டமான கவர்ச்சிக்கு முன்னால், இந்த நிகழ்கால நொடிக்கு நொடி பிரபஞ்ச ஆற்றல் மூச்சின் வழியாக உயிர் காத்துகொண்டு இருப்பது எப்படி மனம் ஏற்றுக்கொள்ளும்?

அந்த பிரமாண்ட கவர்ச்சி தோற்றத்திற்கு முன்னால் தோன்றா நிலையில் இருக்கும், இந்த சுவாச காற்றின் மகிமை, காற்றோடு காற்றாய் பறந்து போய் விடுவது ஒன்றும் வியப்பு இல்லை..

அப்படி பட்ட பிரமாண்டமான மத கட்டிடங்களுக்கு சொந்தமான மதவாதிகள் இந்த கவர்ச்சியற்ற சுவாசத்தின் மகிமையை வைத்து எப்படி பிழைக்க முடியும் ? எப்படி ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வாகிக்க முடியும் ?

ஆகவே உண்மைக்கு எதிராக பொய்யை சொல்லி கவர்ச்சியை காட்டக் கூடிய பொய் கருத்துக்களை சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.. இதை இப்படியே விட்டு விடலாம்..

தோன்றா நிலையில் இருக்கும் நடப்பில் செயல்படும் அந்த சுவாசத்தை பிடிப்பத்தின் மூலம் நம்மில் ஜீவ சமாதியில் இருக்கும் அந்த அககுரு எழ செய்ய வேண்டிய வழியில் பயணப் படுவோம்.. சத்தியத்தை உண்மையை கைகொள்ளுவோம்..

கவர்ச்சி அற்ற அந்த பயணத்தில் சிறிதும் தளர்ச்சி அடையாது அன்பு அற்ற பன் மார்க்க நெறியாளர்களிடம் சிக்கி கொள்ளாமல், அன்பையே ஆதாரமாக கொண்டு மர்ம யோகத்தின் மூலம் நிறைநிலை மனிதாய் விளங்கி என்றும், உயிரோட்டமாய் திகழும் இந்த அண்ட ஆற்றலுக்கு நன்றி கடன் செலுத்துவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.