29/04/2017

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளை வைத்து கெஜ்ரிவாலுக்கு இது மிகப்பெரிய தோல்வியாக கட்டமைக்கிறது ஊடகங்கள்..


இனிமேல் அவ்வளவு தான் ஆம் ஆத்மி என்று எல்லோரும் சொல்லிவைத்தார் போல எழுதுகிறார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்தை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு கட்சியை பலப்படுத்துங்கள் என்று கேலி செய்கிறார்கள் பாஜக ஆதரவு நடுநிலை அறிவுசீவிகள்..

இந்த தேர்தல் முடிவு கெஜ்ரிவாலுக்கு பின்னடைவையே அல்ல. டெல்லி மாநகராட்சியை பாஜக மீண்டும் தக்கவைத்திருப்பதை விட புதிதாக களம்கண்டு இத்தனை வருடமாக ஆட்சி செய்த காங்கிரசை விட அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிற ஆம் ஆத்மி நிஜத்தில் அடுத்த அடியை நோக்கி நகர்ந்திருக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீதான வெறுப்பு போன்று இந்த தேர்தலில் பாஜக மேல் இல்லை என்பது உண்மை தான் என்றாலும் பாஜகவிற்கு எதிரான ஓட்டை காங்கிரஸ் பிரித்த பின்னும் 46 இடங்களை வென்று கணிசமான இடங்களில் இரண்டாமிடம் வந்திருப்பது சாதாரமானதல்ல.

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் வெறும் 3 இடங்களை மட்டுமே பஞ்சாப்பில் வென்ற பாஜகவை விட அங்கே எதுவுமே இல்லாமல் 20 இடங்களை வென்று, டெல்லியில்184 இடத்தில போட்டியிட்டு 46 இடங்களை வென்ற ஆம் ஆத்மி எவ்வளவோ மேல் தான்.

ஆம் ஆத்மி மாற்று சக்தியாக வளர்ந்து விட கூடாது என்ற நோக்கிலேயே Prostitutional ஊடகங்கள் இப்படி எழுதுகின்றன..

இந்திய தேசிய சிந்தனைகளில் முரண்கள் இருந்தாலும் மாற்று சக்திகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைளிலும் மக்கள் செல்வாக்கிலும் வலுவிழந்திருக்கும் இந்த நேரத்தில் ஆம் ஆத்மியின் இருப்பு நமக்கு அவசியமாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.