எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.
அவர் தீர்க்க தரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்தபின்புதான் அதை உணர முடிகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர்.
அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனை அருகேயுள்ள சுவாமி தோப்பில் உதித்த அய்யா வைகுண்டர் ஆவார்.
கி.பி.1809 வருடம் சாதாரண மானிடப் பிறப்பெடுத்த முடிசூடும் பெருமாள் என்கிற முத்துக்குட்டி பின்னர் வைகுண்டர் அவதாரமெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தினார் .
அதோடு மட்டுமல்லாமல் அருள் நூல் மற்றும் அகிலத் திரட்டு ஆகிய நூல்களில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல நடந்தும் நடந்துகொண்டுமிருக்கின்றன.
இப்போது தமிழகத்தின் மிகப்பெரும் போராட்டமாக நடந்துகொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிரான போராட்டம். இது பற்றியும் அய்யா தனது அருள் நூலில் கூறியிருப்பதாக அய்யா வழி நண்பர் ஒருவர் கூறினார். நான் அதைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன் .
இந்நிலையில் நேற்று எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்நூலின் குறிப்பிட்ட பக்கத்தின் நகல் எனக்குக் கிடைத்தது. அந்நூலின் 24 வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் கூடங்குளம் போராட்டம் பற்றி அய்யா கூறியிருப்பதாகத் தோன்றுகிறது. அவ்விரு வரிகள்
அண்ணர்க்களந்தபாலை இடித்தக்கரை காவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா..
கூடங்குளம் அணு உலைக்கெதிரான தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டுகளில் இடிந்தகரையில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.
இது போல இலங்கைத் தமிழர் மறு வாழ்வு குறித்தும் அய்யா குறிப்பிட்டுள்ளதாக அகிலத் திரட்டில் வரிகள் உள்ளன .
அவை ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய்
என்பதாகும் .
இதைப் படிக்கும்போது எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது.
அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும் ..
நன்றி : ayyavazhi.org
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.