29/04/2017

தொட்டாற் சுருங்கி செடி...


சிறுபிள்ளைகளாக இருக்கும் சமயம் இந்த செடியைப் பார்த்தால் தொட்டு விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விளையாட்டு, ஆச்சர்யமும் கூட...

இப்போதும் இந்த அதிசயச் செடியின் மருத்துவ குணங்களைப் படித்தாலே அதே ஆச்சர்யம் அடைவீர்கள்...

மருத்துவ குணங்கள்...

தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும்..

இதன் வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை 10 கிராம் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் கடுப்பு நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்.

உடல் சூடுபிடித்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதை குணமாக்க 10 கிராம் தொட்டாற் சுருங்கி இலையை தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 நாட்கள் சாப்பிட்டால் அந்த எரிச்சல் குணமாகும்.

ஆண்மை பெருக இரவில் 15 கிராம் இலையை பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

இதன் இலையை ஒருபிடி அரைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

ஒரு பங்கு இலைக்கு 10 பங்கு கொதிக்கிற தண்ணீர் ஊற்றி ஆறின பின் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை குடித்து வந்தால் நீர் அடைப்பு, கல்லடைப்பு சரியாகும்.

இலை மற்றும் வேரை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பசுவின் பாலில் போட்டு குடித்துவர மூலம் குணமாகும்.

இதன் இலைச்சாற்றை மூல பவுத்திர ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறிவிடும்.

தொட்டாற் சுருங்கியின் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம் மற்றும் கை கால் மூட்டுகளின் வீக்கம் இவைகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.

இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.

இதன் இலையை ஒரு பெரிய மண் பானையில் போட்டுச் தண்ணீர் விட்டு வேக வைத்து மிதமான சூட்டில் இடுப்பிற்கு ஊற்றி நீவி விட இடுப்பு வலி நீங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.